POST: 2014-02-28T12:37:45+05:30

தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 16,480 முகவரிகளில் 5,84,134 ஓலைச்சுவடிக்கட்டுகள் உள்ளன என்று 2007-2008 ஆண்டுகளில் நடத்திய களப்பணிக் கணக்கொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது,அவற்றில் 35% முதல் 40% விழுக்காடு நூல்கள் அச்சில் வெளி வராதவைகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ம வே பசுபதி தினமணியில் கட்டுரையில்(19.2.2014) குறித்துள்ளார்.

ஏழாண்டுக்குப் பிறகு என்ன நடந்தது? எந்த அளவு முடிந்தது?.ஒரு தமிழ் நூலாவது அகப்படாத அரிய நூல் என்று சொல்ல முடியவில்லை.

சித்த மருத்துவம்,விலங்குகளின் வாகனம்,மந்திர தந்திர விவரங்கள்,மாயா ஜாலங்கள்,அந்த நாளில் கிறித்தவர்களுக்கும்,புலவர்களுக்கும் மறுப்புக்கு மறுப்பும்,தர்கத்திற்கு குதர்க்கமும் ஆகிய வெற்று நூல்கள் இருந்தென்ன? இறந்தென்ன? நாசாவில் வேலை பார்க்கும் நல்லறி வாளர்கள் கூடாவா இந்த மோசடிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாகாது? எவ்வளவு காலத்திற்கு சிந்து வெளி எழுத்தைப்பற்றி மந்தைவெளியில் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள் என்று நையாண்டி செய்திருக்கிறார் ஒரு தமிழாசிரியர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *