POST: 2014-02-24T09:17:17+05:30

இளம்பிள்ளைவாதம் என்ற கொடிய நோய் நலவாழ்வின் தெளிவின்மையாலும்,பெற்றோர்களின் புறக்கணிப்பாலும் நேர்ந்த கொடிய நோயாக இருந்தது. கை,கால் விளங்காமல் போன குழந்தைகளைக் கண்டு கண்ணீர் விட்ட அளவிலேயே துயரப்பட்டிருந்தோம்.

மருத்துவத்தின் மாபெரும் வெற்றியாலும் நலவாழ்வுக்கூறுகளின் தெளிவினால் நேற்று போலியோ ஏறத்தாழ துடைத்தெறியப்பட்டது என்ற நற்செய்திக்காக சுழற்கழகம் மருத்துவர்களை பாராட்டின கூட்டம் நேற்று நடைபெற்றது.மதிய விருந்து சிறப்புடையது,ஆனால் உடல் நலத்திற்கு ஒத்து வராதது.

நாடு நலமடைகிறது என்று நினைப்பதில் பெருமிதம் அமையலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *