ஓம் நமோ நாராயணா!
ஆயர்பாடியில் ஓடி விளையாடி உலகளந்த உத்தமன் தான் இன்று வேங்கடத்தில் வீற்றிருக்கிறார்.
ஐயோ!பாவம் நெய் பற்றாக்குறையால் லட்சக்கணக்கில் லட்டுகளை தயார் செய்யமுடியவில்லையாம்,டால்டா பலமுறை கலப்பிற்கு உதவி செய்திருக்கிறதாம்.அப்படியும் திருப்பதியில் நெய்யுக்கு பஞ்சமென்று அண்மையில் தினமணியில் செய்தி வந்திருக்கிறது.
குஜராத் மாநிலம் நெய் கொடுப்பதன் மூலம் லட்டுகளையும் பெருக்கலாம் வாக்குக்குகளையும் வளப்படுத்திக்கொள்ளலாம்.
நாடு முழுவதும் வீடு தவறாமல் சர்க்கரை நோய் பரவுவதால் லட்டுக்கு பதிலாக கார உருண்டை செய்யலாமா என்றும் ஒரு நண்பர் கேட்கிறார்.
பாவம்,பழனி பஞ்சாமிருதத்தை வாங்க ஆளில்லை.
ஆந்திர லட்டுக்கு அவ்வளவு தட்டுப்பாடு.

Add a Comment