POST: 2014-02-18T08:33:47+05:30

மொழிப்புலமை வேறு,மொழி மானம் வேறு.எவரும் இது பிழைப்பிற்கு ஏற்ற வழியென்றால் அந்த மொழியில் அதிவீரராமராக முடியும்.எழுத்துக்கூட்ட தெரியாமல்,அழுத்தித்
தள்ளப்பட்டு இருந்தாலும் என்றாவாது ஒரு நாள் விழித்துக்கொண்டு இந்த மண்ணும் மதுரையும் என் பழங்குடிகளுக்கு உணர்வு ஊட்டியதில்லையா என்று கேட்பான்.இதைத்தான் சிலர் வலியுறுத்தும் போது Seniority பெரிதெல்ல Sincerity பெரிது என்பார்கள்.இனமான எழுச்சி என்பதன் பொருளாக தெரிகிறது.படிப்பது வேறு,அந்த மொழிக்காக துடிப்பது வேறு.
பவளக்கார தெருவில் லாலாக்கடை மிட்டாயும் விற்கிறார்கள்,பனங்கிழங்கையும் சுட்டு விற்கிறார்கள் என்று ஒரு நூலாசிரியர் எழுதுவதற்கு நாம் எப்படி பொருள் காணலாம்?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *