நமது நாதெள்ளா சத்யா அமெரிக்க நாட்டில்
பில் கேட்ஸ்க்கு அடுத்து அவர் துறைக்கு தலைமைப்பொறுப்பு ஏற்று இருக்கிறார்.இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து,கற்றுப்பெற்ற அறிவுத்திறமையால் இந்த தகுதி வாயத்திருக்கிறது.
தகுதியாளரை நிறம் பார்க்காமல் அமெரிக்க தெரிவு செய்திருப்பது என்று இந்து நாளிதழ் பாராட்டும் போதே,அந்த பாராட்டிற்குள் புதைந்திருக்கும் ஈட்டியின் கூர்மை இருக்கத்தான் செய்கிறது.இதே தகுதியை கறுப்பர் ஆளும் நாட்டில் ஒரு கறுப்பருக்கு கிடைத்திருக்கலாம்.
காலத்தால் கசடு நிறைந்த பிற்போக்கால் நம் காலின் கீழ் மிதிக்கப்பட்டவர்கள் உயர்பதவியை எட்டிப்பார்ப்பதற்கு எண்பது ஆண்டுகளாவது பிடிக்கும்.இது தான் இட ஒதுக்கீடு.
தகுதிக்கு தான் முதலிடம் என்பதை விட தாழ்ந்தவர்களை உயர்ந்திட செய்வோம் என்று சொல்லலாம் அல்லவா? Meritocracy என்பது மீண்டும் அதிகார மிரட்டகராசி ஆக மாறக்கூடாது அல்லவா?

Add a Comment