POST: 2014-02-06T06:53:21+05:30

ஈரடி -திருக்குறள், நாலடி – நாலடியார்.

சிலம்பாடும்போது “ஈரடி, நாலடிக் கற்றவரிடம் ஓரடித் தள்ளி நில்“ என்று கூறும் வழக்கு உள்ளது.

“ஆலும், வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி“ என்றும், பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்றும் கூறுவர்.

ஈரடியும், நாலடியும் தமிழகத்தினுடைய நீதி நெறியின் நிகண்டுகள் எனலாம். இது தமிழர்களின் சொத்து.

மக்கள் நல்லவர்களாக வாழ்வதோடு வல்லவர்களாகத் திகழ்வதற்கும் வழிவகுத்துக் கூறும் வாழ்க்கை நூல்கள்.

திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள்
அறம் (38), பொருள் (70), இன்பம் (25) என்று வகுத்துக் காட்டுகிறது.

நாலடியார் திருக்குறளைப் போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்றையும் காட்டி அறத்துப்பால் 13 அதிகாரம், பொருட்பால் 24 அதிகாரம், காமத்துப்பால் 3 அதிகாரங்களையும் கொண்டது. ஏறக்குறைய திருக்குறளில் 1/3 பங்கு உடையது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *