POST: 2014-02-04T07:36:17+05:30

அமெரிக்காவின் இரட்டை முகம்-இருட்டு முகம்

இரண்டு முகங்கள்,இழிவு முகங்கள் அந்த வானூர்தி அமெரிக்காவிலிருந்து பறந்தது,கராச்சிக்குப் போய் சேர்ந்த போது இலிபியா நாட்டு வன்முறையாளர்கள் விமானத்தை கடத்திச்சுட்டனர்.

அங்கே இருந்த பன்னாட்டுச்சிறார்களை ஆரத்தழுவி அரணாக இருந்து துப்பாக்கிச்சூட்டில் இரையானார் அந்த ஏறணங்கு இன்று நடந்ததல்ல;இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர்(5.9.1986)

வாதிட்டு வழக்கிட்டு இலிபியாவிடம் இழப்பீடாக பெற்ற
1.5 பில்லியன் தாலர்
(ஒன்பதாயிரத்து இருநூற்று முப்பத்தியாறு கோடியே அறுபத்தியைந்து இலட்சத்து ஐம்பதாயிரம்) இந்திய உருபாய்.
அமெரிக்கா நாடு அமெரிக்கா நாட்டின் அந்தந்த குடும்பங்களுக்கு வழங்கியது.

இந்திய நாட்டைச்சார்ந்த 120 குடும்பங்களுக்கு இம்மியளவு கூட இழப்பீட்டு தொகை தரப்படவில்லை.அந்த ஏறணங்கு நீரஜா பானாட் என்ற அந்த வானூர்தி தாதிக்கு இந்தியவரசு வீரத்தைக்கண்டு விம்மிதமுற்று அசோக ஆழி விருது அளிக்கப்பட்டது.

இன்றும் கூட அமெரிக்க கண்ணுக்கு வெண்ணையும் இந்திய கண்ணுக்கு சுண்ணாம்பு கூட தராமல் இரண்டு முகத்தால் இரண்டகம் செய்கிறது அமெரிக்கா.

தேவயானியை தெருவில் இழுத்து அலங்கோலப்படுத்துவதில் அமெரிக்கரின் இருட்டு முகம் இன்னுமா தெரியவில்லை என்று கிளியா விளம்பர நிறுவனத்தில் தலைவராக இருந்தவரும் நினைவில் வாழும் நீராஜா பானாட் அவர்களின் அண்ணன் அனீஷ் பானாட் வெகுண்டு எழுந்து வினவியிருக்கிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *