POST: 2014-01-29T08:20:18+05:30

காலைத் தூக்கி நின்றாடும் நடராஜ வடிவத்தைப் பற்றி விடை சொல்ல முடியாத குறிப்புக்கள் உள்ளன.
இது காஷ்மீர சைவத்தின் தாக்கமா?
நேபாளி சைவத்தின் தாக்கமா?
மத்திய பிரதேசத்தில் உள்ள கோளகீய சைவத்தின் தாக்கமா?
வல்லுநர்கள் ஆராய வேண்டும்.
சைவம் கன்னடத்தில் வீர சைவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் ஸ்ரீ சைலத்தை ஒட்டிய இராயலசீமா பகுதியில் சைவம் தழைத்திருக்கிறது.
மலையாளத்திலும் சிவவழிபாடு இருக்கிறது.
இதிலென்ன தென்னாடுடைய சிவன் என்று திருவாசகம் சொல்வதன் குறிப்பு என்ன என்று நண்பர்கள் விடை சொல்லலாம். இந்திப் பேராசிரியர் திரு. கோவிந்தராஜன் என்னிடத்தில் இதைக் கேட்டார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *