குலங்களாக மக்கள் பிரிந்தனர்.
பல குலங்களுக்கு பல கடவுளர் ஏற்பட்டனர்.
பல குலம் ஏனென்று சில குலமாயிற்று.
கடவுளர் பலராகவே இருந்தனர்.
ஆண் குலம்,பெண் குலம் இரு குலமாயிற்றே எனவும் அம்மை அப்பன் என்ற இரு கடவுளர் போதுமே என்று எண்ணினார்கள்!
ஆண்னென்ன பெண்னென்ன ஒரு குலம் ஒரு தேவன் போதாதா? என்று கருதினர்.
எந்த தேவன் என்ற இடையறாத போர் வந்தது.
ஒன்றே குலம் ஒருவனும் தேவனில்லை என்று முடிவது தானே அறிவியல் கணக்கின் நீக்கு முறையாகும்.

Add a Comment