POST: 2014-01-19T21:29:55+05:30

இளம்பிள்ளை வாதம் எலும்புகளை வளைத்து முடமாக்கும் கொடிய நோயாகும்.குழந்தைகள் இரையாகி வாழ்வு முழுவதும் ஒடுங்கி இருந்து நாற்பதாண்டுகளுக்குள் உலர்வதைக் காண்கின்றோம்.போலியோ இல்லாத உலகம் கனவாக இருந்து இப்போது நினைவாகி உள்ளது.

எங்கள் குடும்பத்திலேயே எங்கள் அத்தை மகள் மல்லிகை போலியோவுக்கு இரையாகி நேற்றிவு மறைந்தாள்.மல்லிகையின் தமக்கை டாக்டர் புன்னகை புகழ்வாய்ந்த மருத்துவர்.போலியோ நாள் என்று இன்று பார்த்தபோது அதே நாளில் மல்லிகை உதிர்ந்து எங்கள் மனத்தை தவிக்க வைத்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *