நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கில அரசு கல்கத்தா, பம்பாய், சென்னை மாநகரங்களில் முதல் பல்கலைக்கழகங்களை உருவாக்கினர். அந்த வளர்ச்சியால் அரசோடு இணைந்து தனியாரும் தங்கள் உடைமைகளையெல்லாம் வழங்கி தாங்கள் வைத்திருந்த நிலபுலங்களை முதலீடாகக் கொண்டு பள்ளிகளையும், கல்லூரிகளையும் உருவாக்கி சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் அனைத்துப் பிள்ளைகளையும் அரவணைத்து கல்வியமுதம் ஊட்டி வருகின்றனர். இந்தப் பெருமை வேரூன்ற வேண்டும் எந்த நோக்கத்தோடு மகாகவி பாரதியார்,
“இன்னறும் கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்“
என்று நம் உள்ளம் உருக கல்விப் பணிக்கு ஊக்கம் தந்திருக்கிறார்.

Add a Comment