இந்து சமய அறநிலையத்துறையின் கணக்குப்படி ஏறத்தாழ நாற்பதாயிரம் கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. பிடித்துத் தள்ளினால் பிள்ளையார் கோயிலில் தான் விழ நேரிடும் என்றே பழகு தமிழில் ஒரு வழக்கு உண்டு. அதுபோலவே மதங்கள் சைவம், வைணவம், புத்தம், சமணம், இசுலாமியம், கிறித்தவம் என்று மதப் பாகுபாட்டினை 100க்குக் குறையாமல் கணக்கிடலாம். கோயில்கள் மதங்கள் இவர்களின் நிறுவனத் தலைவர்கள், சமயத் தலைவர்கள், சந்நிதானங்கள், ஜீயர்கள், பாதிரியார்கள், மௌலிகர் என்று பலராக உள்ளனர். இவர்களுக்கப்பால் நம்பிக்கைக் குழுவினர் CULTS எனப்படும் பிரிவுகளில் பலர் அடங்குவார்கள். ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ரவிசங்கர், ஜக்கி, சாய்பாபா, புட்டபர்த்தி, ஷீரடி,வேதாத்திரி மகரிஷி, பங்காரு அடிகள் போல.இந்தக் கூட்டம் இந்நாளில் பெருகி வருகிறது. கிறித்துவத்துக்குள்ளேயே நூற்றுக்கு மேற்பட்ட பிரிவினர் உள்ளனர். இவர்கள் மதவாதிகள் அல்லர். கொள்கைக்குழுவினர் என்று அழைக்கலாம். Religious leaders and Spiritual Preachers, என்று இரு வகையாகச் சொல்லலாம். சடங்குகளை ஆதரிக்காமல் சமூகச் சீர்திருத்தங்களில் இவர்கள் அக்கறை காட்டுகின்றனர்.

Add a Comment