POST: 2015-10-19T12:17:42+05:30

25TH GRADUATION DAY SPEECH
on 05.07.2015
CHIEF GUEST’S SPEECH BY
THIRU.AVVAI NATARAJAN-6
Valliammal Women college,Annanagar-4

அரசியார் மகிழ்ந்து இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் எப்படிப்பட்ட மாணிக்கங்களாக மிளிர்வார்கள் என்பதற்கு, அர்நால்ட் ஒரு சான்றாக இருப்பார் என்று சொன்னார்.
அன்று முதல் Arnoldian Tradition என்றே பெயர் வந்து விட்டது.

I wish Pathmaja, to be another Arnold for this Institution. And make the students as diamonds.

மாணவிகளே! நாளைக்கு நீங்கள் எல்லாம் வள்ளியம்மாள் பள்ளியை விட்டு விட்டு அயல் நாடுகளுக்கோ அல்லது சென்னயிலேயோ அல்லது வேறு நிறுவனங்களிலோ மிக உயர்ந்த பதவிகளை ஏற்க இருக்கிறீர்கள்.

கிட்டத்தட்ட நான் சொன்னால் ஒரு வேளை ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட இது ஒரு கல்யாணம் நடப்பது மாதிரி. நெசமா நடக்கிற கல்யாணம் எப்போவோ நடக்கும். ஆனால் கல்வி முடித்த பிறகு நீங்கள் இந்த மஞ்சள் துணியைப் போட்டு இருக்கிறீர்கள், கருப்பு துணிகளைப் போட்டு இருக்கிறீர்கள் என்று சொன்னால்,
டாக்டர் ராதா கிருஷ்ணன் சொன்னார்,
“The very rope which adorns you rather looks like the beautiful bride“ என்று சொன்னார். எனவே, உங்கள் வாழ்க்கை தொடங்கப்போகும் நாள் என்று சொன்னால், இந்த Academic Robe தான்.

நீங்கள் நல்லபடியாக கல்வியில் பெருமை அடைய வேண்டும். உலக நாடுகள் எங்கே வேண்டுமானாலும் போய் நீங்கள் பணி ஏற்றுக்கொள்ளலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *