POST: 2015-10-15T09:52:46+05:30

25TH GRADUATION DAY SPEECH
on 05.07.2015
CHIEF GUEST’S SPEECH BY
THIRU.AVVAI NATARAJAN
Valliammal Women college,Annanagar-4

பாரதியாரை பாருங்கள், எல்லாரும் சமானம் என்று சொன்னால் போதும், நிகர்னு சொன்னால் போதும். சரியானவர்கள் என்று சொன்னால் போதும். சரி, நிகர், சமானம்.

எனவே, இப்போது அப்படிப்பட்ட கருத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் கூட சொன்னால், அச்சம் என்பதை எந்த நிலையிலும் வாழ்வில் வைத்துக் கொள்ளவே கூடாது. அச்சமில்லாமல் வாழ முடியும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டியது தாய் தான். அப்படிப்பட்ட உணர்வு தான் உங்களுக்கு வர வேண்டும்.

ஒரு நிகழ்ச்சியை மட்டும் சொல்லி முடிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

It was during the reign of Queen Victoria. Queen Victoria was the Queen for quite a long time.

ஒரு தடவை குயின் விக்டோரியா லண்டனில் ஒரு தெரு வழியாக போய்க் கொண்டிருந்தார்கள். அந்த காலத்திலும் சரி, இப்போதும் நீங்கள் பார்க்கலாம், நீங்கள் யாரேனும், நிச்சியமாக இங்கிலாந்து போய் இருப்பீர்கள். அங்கு ஒரு பெரிய கடை இருக்கிறது. நம்ம சிந்தாமணி என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஹார்வர்ட் என்று பெயர் அதற்க்கு. அந்த கடையில வந்து பொருள் வாங்குகிறவர்கள் யார் என்று பார்த்தால், குயின் கூட வந்து வாங்குவார்கள். குயினுடைய வீட்டுக்காரர்கள் வந்து வாங்குவார்கள். அவர்களுக்கு எந்த விதமான வேறுபாடும் இல்லை. விக்டோரியா காரில் போகும்போது பின்னால் நான்கு கார் முன்னால் மூன்று கார் போகாது. விக்டோரியா போகிறார்கள் என்றே பலருக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஹாய் குயின் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள்.

விக்டோரியா என்ன செய்தார்கள் அப்படி போகும்போது அங்க ஒரு விமன்ஸ் காலேஜ் இருக்கிறது. பார்த்த உடனே அந்த அம்மா காரை நிறுத்தினார்கள். அது விமன்ஸ் காலேஜ் என்று இருந்து that became both Mens college too. அந்த அம்மா இறங்குகிறார்கள் காரை விட்டு. இறங்கி போகும்போது வகுப்பு நடந்து கொண்டே இருக்கிறது. அந்த அம்மா நடந்து வந்ததை யாரும் கவனிக்கவில்லை. நேரடியாக இரண்டு மூன்று வகுப்புக்குள் அந்த அம்மா நுழைந்தார்கள். பார்த்து, அந்த பிள்ளைகளை பார்த்து பேசிவிட்டார்கள். உடனே பாருங்கள், அந்த பள்ளியும் ஒரு ஏவலர் அதை பார்த்துவிட்டார். ஓடிப்போய் அவர்களின் கல்லூரியின் சேர்மனைப் பார்த்து Her majesty Queen has come, Wow, Queen. அப்படியே அசந்து விட்டார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *