அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -6
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
இப்போது பிறக்கும் குழந்தைகள் ஏதோ குழந்தை பிறந்தது, வளர்ந்தது, வாழ்கின்றது என்றில்லாமல் அந்தக் குழந்தைகளின் வாழ்வு மிகுந்த சிறப்புடையதாக அமைய வேண்டும்.
சிறப்பாகக் குழந்தை நலத்தைப் பேணி வளர்க்கவேண்டும்.
சீரிய மருத்துவ நலங்களைப் பெறுவதன் மூலமே மனநிலையில் குறைபாடுகள் இல்லாமல் சமூகப் பழக்கவழக்கங்களில் குறைபாடுகள் இல்லாமல் பெற்றோர்களுடைய அன்பாலும், அரவணைப்பாலும் குழந்தைகள் சிறப்புடன் வளர முடியும்.
உரிமை வாழ்வை நமது நாடு எய்தியபிறகு குழந்தை நலத்
தைப் பெரிதும் பேணி வருகின்றனர்.
இல்லாமை, கல்லாமை இந்த இரண்டு வாள்முனைகளின் நடுவில் அகப்படும் எவையும் துண்டுபடுவது இயற்கையாகும்.
விரைந்து இவைகளை நீக்கினால் நோய்கள் குறையும். வளவாழ்வு அமையும்.
நாட்டில் பிறக்கும் பிள்ளைகள் பிள்ளைக்கனியமுதாய், பேசும் பொற்சித்திரங்களாய் அமைவர்.
இன்றைய அறிவியல் ஊழியில் கணத்துக்குக் கணம் மருத்துவ அறிவியல் வளர்கிறது.
குழந்தைகள் நல மருத்துவத்தில் அரிய பெரிய அகன்ற நுண்ணிய கண்டுபிடிப்புகள் ஓங்கிவளர்கின்றன.
வளரும் குழந்தைகளைப் பார்த்துத்தான் ஒரு நாட்டின் வாழ்வையும் வரலாற்றையும் வரையும் திறம் அமைய வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோள்.

Add a Comment