POST: 2015-08-27T12:01:47+05:30

சிற்பி செதுக்காத சிந்தனை

வாழ்த்துரை

முனைவர் ஔவை நடராசன்,
முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம்.

புலம் பெயர்ந்து அமெரிக்கத் திருநாட்டில் புகழோடு வாழ்ந்துவரும் வேளாண்மை வித்தகர் யாழ. இரா.சண்முகலிங்கம் அவர்களை யான் பல்லாண்டுகளாக அறிவேன். அறிவியல் நுணுக்கத்தோடு வேளாண்மைத்துறையை அணுகி தாயகத்தின் வள வாழ்விற்கு பெருந்தொண்டாற்ற வேண்மென்ற கனவிலேயே வாழ்ந்து வருகிறார்.

இன்றைய கணினிக்கலையிலும் புலமை பெற்ற கணினிிச் செய்திகளைத் தமிழில் வழங்கி உறவாட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார். யாழன் மென்பொருள் என்ற நிரலியை வடிவமைத்து குறில், நெடில் என்ற வகையில் தமிழ் எழுத்துக்களைப் பிரித்து மாற்றடுப்பு முறையில் ஆங்கில எழுத்து அடைப்புக்குள்ளேயே தமிழ் எழுத்துக்களையும் குறுகத்தரித்ததாக சண்முகனார் ஆக்கிய பணி உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது.

அங்கும் இங்குமாக தத்தம் உறவுகளைப் பிரிந்து அலமற்றபோதும் பொங்கு தமிழ் ஒன்றே தமிழுக்குப் புகல் உறவாக்கிற்று என்று எண்ணி வாழும் அறிவியல் அறிஞர் யாழன் சண்கலிங்கம் எழுபது ஆண்டை நிறைவு செய்கிறார்.

தமது சிந்தனை அலைகளை அவ்வப்போது கட்டுரைகளாக எழுதித் தமிழ்ப்பணியில் வெளியிட்டதைத் தொகையாக்கி இந்நூல் வெளிவருகிறது.

அன்பே உணர்வாகவும், ஆர்வமே எழுச்சியாகவும் அறிவைத்தேடி அமைந்த கட்டுரைகள் இந்நூலை அணி செய்கின்றன.

தன் நிறைவு நாளில் ஐன்ஸ்டின் கூட தனது சேமிப்புத் இசுரேல் நாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார். அறிவியலார்களும் சிந்தனவாணர்களுமாக நானிலமெங்கும் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் வேட்கையும் அதுவேயாகும்.

செயல் வீரராகவும், சிந்தனைச் செம்மலாகவும் திகழும் பெருந்தகை சண்முகலிங்கம் பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து இன் தமிழ் தொண்டை வளர்த்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *