POST: 2015-08-26T08:30:55+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-6
‘‘பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று’’ என்பார் உரையா சிரியர் பரிமேலழகர். 103 பண்களின் பெயர்கள் சூடாமணி நிகண்டு, பிங்கள நிகண்டு ஆகிய நூல்களின் வாயிலாக அறியலாம். இவை, பண், பண்ணியற்றிறம், திறம், திறத்திறம் என்று நான்வகையாகவும் வகைப்படுத்தப்பட்டன. இவையே இன்று சம்பூர்ணம், சாடவம், ஔடவம், சுவராந்திரம் என்னும் வடமொழிப்பெயர்களால் குறிக்கப்படுகின்றன. பாடலோடு பொருந்தி திறம்பெறவேண்டிய பண்களின் இன்றியமையாமையை உணர்த்திய திருவள்ளுவர், கண்ணுக்குக் கண்ணோட்டம் எவ்வாறோ, அவ்வாறே பாடலும் பண்ணும் இயைந்து செல்லும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *