தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-4
தமிழிசைச் சங்கம் இசையரங்குகளோடு ஆய்வரங்குகளையும் அமைக்க வேண்டுமென அறிஞர்கள் கருதியதால் பண்ணிசை மாநாடு தோன்றியது.
ஆண்டுதோறும் சென்னை இசைத்திறனைப் பேரவையினரும் இசையாய்வு நடத்தி வந்தனர். தமிழிசைச் சங்கம் தமிழ் மரபுக்கேற்ற தனிவகையில் திருமுறைப் பண்களைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கி, பண்ணாராய்ச்சி மாநாடாக இதனைச் செவ்வனே நடத்திவருகிறது
. எங்கள் பேராசிரியர் பண்டிதமணி லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் செயலாளராகத் தொடக்க நாளிலிருந்து இத்தூய பணிக்குத் துணைநின்ற பெருமகனாராவார்.
விழுமிய புலமை முயற்சியும், அழுந்திய திருமுறைப் பயிற்சியும் கொண்ட ஓதுவார்களும் தமிழறிஞர்களும் இசைவித்தகரும் பண்ணாராய்ச்சியில் பங்குகொண்டு சிறப்பாக நடத்துகின்றனர்.

Add a Comment