POST: 2015-07-14T09:44:44+05:30

இந்தியப் பண்பாடு-11

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

நீங்கள் இந்திய நாட்டு வரலாற்றையும் எண்ணிப் பாருங்கள். இதிகாசங்களைக் கூடப் பாருங்கள், இது முறைமையில்லை என்றுசொல்லிக் கோசலை மனம் வருந்தினாலும் கூட `நின்னினும் நல்லவன் நிறை குணத்தவன்` என்று பரதனைப்பற்றிச் சொல்லி முறைமையில்லையே என்று வருந்துகிறாள். எனவே வயது, ஆளவேண்டுமென்னும் முறைமை இவற்றையெல்லாம் கருதாமல் தகுதியுடையவர் வரவேண்டுமென்கிற வகையில்தான் மூத்தவனாக இருக்கிறான் என்று மட்டுமே எண்ணாமல், அறிவாற்றல் உள்ளவனாகத் திகழ்கிறானா என்று மட்டுமே கருதியிருக்கிறார்கள்.
எனவே இந்திய நாட்டுக்கென்று அமைந்த அறிவாற்றலுக்குச் சிறப்புக்கூட்டுவது என்பதோடு எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில்தான் வேந்தனுக்குப் பெருமை எனச் சொன்னார்கள்;

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *