முனைவர் ஔவை நடராசன் உரை-3
தமிழ் மொழியின் பெருமிதம் மட்டுமல்ல, தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற உணர்வுமட்டுமல்ல, எழுதுகின்ற எழுத்து ஒவ்வொன்றிலும்கூட தமிழ் எப்படி சிந்தமுடியும் என்பதற்கு தமிழ்மண்ணில் நீங்கள் எழுதுகின்ற கட்டுரைகள் சான்றாகும். தமிழ்மண் கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். ஒவ்வொரு கட்டுரையிலும் நீங்கள் பயன்படுத்து கின்ற சொற்கள் எல்லாம் வெறும் சொற்கள் அல்ல; வைரக்கற்கள். இப்படி, நீங்கள் ஊக்கத்தோடு தொடர்கின்ற தமிழ் உணர்ச்சிக்கு தமிழ் ஆசிரியர்கள் நாங்கள் எல்லாம் அடிமைகள். நாங்கள் அடிமைகள் என்று சொன்னாலும்கூட அந்தக் கொடுமையை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். எங்களைத் தோழர்களாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். உங்கள் தோழமையோடு தமிழாசிரியர்களும் தோள் கொடுக்க எப்போதும் துணிவாக இருக்கிறார்கள்.
சிந்தனையாளர் அருமை நண்பர் இரவிக்குமார் அவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளைக் காணும்பொழுது வியப்பாக உள்ளது. எப்படிப்பட்ட ஆழ்ந்த புலமையோடு எவ்வளவு அரிய நூல்களின் கருத்துக்களை யெல்லாம் அவர் திரட்டித் தருகிறார்.

Add a Comment