POST: 2015-05-19T20:51:35+05:30

முனைவர் ஔவை நடராசன் உரை-2

செம்மொழிக்கான ஒரு பெருமையைச் சொல்ல விரும்புகிறேன். தமிழில் ‘சாதி’ என்ற சொல் இல்லை; தமிழில் ‘மதம்’ என்ற சொல் இல்லை; தமிழில் ‘இந்து’ என்ற சொல் இல்லை. இந்த மூன்றும் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இருக்கின்றன. தமிழில் மட்டும் தான் இல்லை. இதிலிருந்து சமத்துவ உணர்வு யாருடையது, எந்த மக்களுடையது என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்.

ஒருமுறை தந்தை பெரியார் சொன்னார், தமிழ்த் தென்றல் என்று திரு.வி.கவை அழைக்கின்றீர்களே அவர் தன்னுடைய பத்திரிகையை ‘நவசக்தி’ என்றும் ‘தேச பக்தன்’ என்றும் வைத்திருக்கிறார். நான், ‘விடுதலை’, ‘குடியரசு’ என்று பெயர் வைத்திருக்கிறேன். எது தமிழ் என்று கேட்டார். திரு.வி.க. மிரண்டுபோய், ‘நாங்கள் எல்லாம் தெரியாமல்தான் வைத்திருக்கிறோம்’ என்று சொன்னார். எனவே, தொடங்குகின்றபோதே தமிழ் உணர்ச்சி என்பது எப்படி தொடங்குகிறது என்றால், ஆதிக்கத்தை எதிர்க்கின்றபோதும் அடிமைப்படுத்துகிறவனின் கையை முறிக்கின்ற போதும்தான் துணிவு வரும். அப்படிப்பட்ட துணிவு வந்த நேரத்தில்தான் நூறாண்டுகளாக தமிழ் மொழியை ஒரு மொழியாகக் கருதாத வர்கள், வடமொழி இருக்கலாம், ஆங்கிலம் இருக்கலாம், தமிழ் எளிய மக்கள் பேசுகின்ற மொழிதானே என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் இருநதார்கள். அரசாங்கத்திடம் சென்று அறிக்கை தந்தார்கள். ஆனால், நல்லவேளையாக அந்தப் பொய் வாதங்களெல்லாம் பொடிப்பொடியாகப் போனதன் விளைவாகத்தான் செம்மொழி என்கிற வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. செம்மொழி என்கிற பெருமிதத்தைப் பெற்றே தீரவேண்டும் என்று அந்த நாளில் எழுச்சித்தமிழர் உட்பட, கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோதுதான் மைய அரசிடம் வாதாடி செம்மொழி என்கிற பெருமிதத்தைப் பெற்றார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *