முனைவர் ஔவை நடராசன் உரை-1
திருமாவளவன் எழுத்து வெறும் சொற்கள் அல்ல வைரக் கற்கள்
அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்ப் பெயரால் தமிழ்நாட்டில் வழங்கப் படுகின்ற தலைவர் திருமாவளவன் ஒருவர்தான். தன்னுடைய பெயர் மட்டும் தமிழாக இருக்க வேண்டும் என்று கருதாமல் தன்னுடைய தொண்டர்கள் பெயர்கள் எல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று தமிழ்த் தொண்டு செய்யும் பெருமை அருமைத் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களைத்தான் சாரும்.
அரசியல் தலைவர்களில் பெருமிதத்தோடு எண்ணிப் பார்க்கின்றபோது ‘செம்மொழி ஞாயிறு’ என்று சொன்னால் மொழி ஞாயிறு என்கிற புகழ்ப்பெயர் பெருந்தகை பாவாணர் அவர்களைத் தான் சாரும். பாவாணர் ஊட்டிய தனித்தமிழ் உணர்வுதான் அரசியல் உலகத்திலும் தமிழ் உணர்ச்சியை பெருக்கியது. அதே பெயரில் அந்த மொழி ஞாயிறு தலைமுறையைச் சார்ந்தவர்கள், அவருடைய தொண்டர்கள் என்கிற வகையில் அந்த விருது எங்களுக்கெல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது.

Add a Comment