ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் உருவாக்கிய பெரும்பாலான சொற்றொடர்களும் சொல்லாடல்களும் இன்றைக்கு அன்றாடப் புழக்கத்தில் உள்ளன. அவ்வகையில் சிலவற்றைக் குறிப்பிடலாம்.
‘சுருங்கக் கூறல் அறிவாற்றலின் ஆன்மா’ (brevity is the soul of wit), ‘
அதுதான் சிக்கல்’ (there’s the rub), ‘
ஆள் பாதி ஆடை பாதி’ (the apparel oft proclaims the man),
‘கொள்வோனும் இல்லை கொடுப்போனும் இல்லை’ (neither a borrower or the lender be),
‘ஆம்பலை அழகுறுத்தியாங்கு’ (paint the lily),
‘மாந்தத் தன்மையின் அன்பமுதம்’ (milk of human kindness),
‘ஈவிரக்கமற்ற கொடூரக் கொலை’ (the most unkindest cut of all),
‘பொன்மனம்’ (heart of gold),
‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ (all that glitters is nit gold),
‘வாய் கிழியும் வரை சிரி’ (laugh yourself into stitches),
‘தீங்கிழைத்தோன் என்பதைக் காட்டிலும் பெரிதும் தீங்கிழைக்கப்பட்டவன்’ (more sinned against than a sinner),
‘காதல் வேட்கைக்குக் கருவியிசை தான் உணவென்றால்’ (if music be the food of love), ‘
தீய கூட்டணி’ (bad bedfellows),
‘பேந்த விழிக்கும் பேதைகள்’ (blinking idiots),
‘ஒரே பாய்ச்சலில் தேக்கநிலையை மாற்று’ (break the ice with one fell swoop)

Add a Comment