நாட்டு மக்களைத் தன் குடும்பத்தாராகவும் தன்னைக் குடும்பத் தலைவனாகவும் எண்ணிய மன்னன், மக்களுக்குத் துன்பந்தரும் இடையூறுகளை முன்னறிந்து விலக்குவதிலும் அவர்கள் விரும்பும் இன்பத்திற்குரிய வழி துறைகளை நிலைபெற ஆக்குவதிலும் இடைவிடாது உழைத்து வருவானாயினன். தம் கீழ் வாழும் குடிமக்களின் கவலைகளையெல்லாம் தம் உள்ளத்தடக்கி ஊணுறக்கமின்றி உழைக்கும் பொறுப்பு தமிழ் நாட்டு முடிவேந்தர்க்கு உரியதாயிருந்தது.
டாக்டர் ஔவை நடராசானர்

Add a Comment