POST: 2015-04-14T13:35:03+05:30

தமிழ் வேந்தரிடைய காணப்பெற்ற ஒற்றுமைத் திறம், பிற்காலத்தில் இந்நாட்டிற் குடிபுகுந்த அயலாரது கூட்டுறவால் சிதையத் தொடங்கியது. தமிழ்க் குலத்தாருடன் தொடர்பில்லாத அயலார் சிலர் தமிழ் வேந்தர் மூவரையும் தனித்தனியே அணுகி, அவர்தமை உயர்த்திப் புகழ்ந்து, ஒரு குடும்பத்தவராய் வாழ்ந்த அம்மூவரையும் பேதித்துப் பிரித்து வைக்குந் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அதனால், மூவேந்தரும் தொன்றுதொட்டு வரும் தம் உறவினை மறந்து, தமக்குள் பகைமை பாராட்டுவாராயினர்.

டாக்டர் ஔவை நடராசானர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *