இல்லற வாழ்வைச் செவ்விய வழியில் நடத்திச் சிறப்படைய வேண்டும் என்பது நூலாசிரியரின் குறிக்கோளாகும். மக்களின் மனை வாழ்வும், மன உணர்வும் ஒழுங்குபடத் திகழவேண்டும் என்பதாலேயே சங்க இலக்கியத்தில் காதல் நெறியை இரண்டாயிரம் செய்யுட்களாக நானூறு புலவர்கள் எழுதிப் பாலொழுக்கப் பாடல்களாக அகத்திணையை அழகு செய்தனர். அந்தத் தொன்மையான வரம்பினை இன்றைய நிலைக்கு ஏற்ற வகையில் புதிரா? புனிதமா? என்ற பெயரில் என்ற பெயரில் டாக்டர் மாத்ருபூதம் விளக்கி வரைவதில் தன்னிகரற்று விளங்குகிறார்.
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

Add a Comment