அரிது அரிது மானிடர் ஆதல் அரிது‘ என்பர். மானிட வாழ்வை நாம் மதித்து நடக்கின்றோமா? நடைமுறையில் நமக்குள் எத்தனை வேற்றுமை? உயர்வென்றும், தாழ்வென்றும் ஏழை என்றும், சொல்வந்தன் என்றும்,செயற்கரிய செய்வாரென்றும், செய்யாதார் என்றும் எத்தனை மேல் கீழ் உள்ளன ! எவை எப்படி இருந்தாலும், எல்லாத் திறத்தார்க்கும் உடலை ஓம்புதல் என்பதில் கடுகளவும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. திருமணத்துக்கு முன்னும் பின்னும் உடலைப் பேணி வளர்க்கும் பெற்றிமையை நாம் பெற்றிருக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

Add a Comment