அம்மூவனார்-5
டாக்டர் ஔவை நடராசன்
கனவுப் பாடல் 82
கற்புப் பாடல் 45
தலைவி கூற்று 56
தோழி கூற்று 43
தலைவன் கூற்று 17
பரத்தை கூற்று 10
நற்றாய் கூற்று 1
பிற்கால இலக்கியங்கட்குப் பல புதுவழி திறந்தவர் அம்மூவனார். அகத்திணை நிகழ்ச்சிகள் கோவையாக நிரல் படத் தொடுக்கப்படும் பெற்றியதன்று, இவ்வடிப்படை இலக்கணத்திற்கு இவர்தம் ஐங்குறு நூற்றின் தொண்டிப்பத்து (171-80) பெருமுரணாகும். இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம். இரந்து குறையுறல், வரைவு கடாதல் என்று களவின் ஒழுகலாறுகளை ஒரு பத்துப்பாட்டில் தொடர்ச்சியாகக் கூறுவர். ஒவ்வொரு தலைப்பில் பப்பத்துப் பாடல் யாப்பது என்று நூல் அமைத்துக் கொண்டமையால், இவர்க்குக் களவுக் கோவை பாடும் எண்ணம் முளைத்தது போலும். அவ்வெண்ணம் நன்கு மலரவில்லை என்பது களவிற்குச் சிறந்த உடன்போக்கு, அறத்தொடு நிலைத்துறைகளைப் பாடாமையாற் போதரும். தமிழில் கோவை ஒரு தனியிலக்கியமாகத் தோன்றி வளர்தற்கு ஐங்குறு நூற்றுத் தொண்டிக் கோவையே மூலம் என்று அறிக

Add a Comment