விருந்தினர் பக்கம்-4
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
சாதிகள் இல்லையடி பாப்பா! என்று பாடல் பாடியுள்ளார். சாதிகள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமென்று மிகவும் பாடுபட்டிருக்கிறார் பாரதியார். அதைப் பற்றித் தங்கள் கருத்து?
ஒரு சிந்து பாடுகின்ற கவிஞர் மட்டுமல்ல. ஒரு சீர்த்திருத்தம் விரும்பிய புரட்சிக்கவிஞர் என்று நாம் அவரை அழைத்தால், அதிலே குறையே இல்லை. சாதிகள் இல்லை. சாதி மதங்களைப் பாரோம். வேதியராயினும் ஒன்றே!
மற்று வேறுகுலத்தினராயினும் ஒன்றே!
சாதிகளைத் தூள் தூளாக்குவோம்.
மண்டும் மதங்கள் அண்டாத நெருப்பு,
அயலார் எதிர்ப்புக்கு அணையாத விளக்கு’
என்று நான் முதலிலேயே சொன்னேன்.
சாதி வேறுபாடுகளைக் களைந்தால்தான் விடுதலையினுடைய முழுவடிவம் கிடைக்கும் என்று பாடிக்காட்டியவர் பாரதியார்.
நிற்பவர்கள் எல்லோரும் அந்தந்த நாட்டு உரிமையோடும் அந்தந்த நாட்டு மக்கள் என்ற பெருமிதத்தோடும் ‘கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர், நம்பற்குரியர் அவ்வீரர்’ என்று சொல்லி, ஆண்பெண் நிகர், சாதிமதம் இல்லாத இனம், சமத்துவ வாழ்வு, அந்த உணர்வினாலே தான், அவர் ரஷ்யாவில் நடந்த புரட்சியைப் பார்த்து, மாகாளி கடைக்கண் வைத்தால் அங்கே! எனவே மாகாளி கடைக்கண் வைத்தால், சமதர்மம் தானாகப் பிறக்கும் என்ற கருத்திலே நம்பிக்கை உடையவர் பாரதியார்.

Add a Comment