ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-4
பாரதியார் பெயரைச் சொல்கின்றபோதே, கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், 1981ல் பாரதியார் நூற்றாண்டு விழாவுக்காக அப்போது அரசு ரூபாய் 3 இலட்சத்தை வழங்கி, பாரதி பாடல்களின் ஒரு பதிப்பை வெளியிட வேண்டும் என்று விரும்பினார்கள். திருத்தமான பதிப்பை தேடித் தேடி, ஓடி ஓடி, பாரதி அன்பர்களை நாடி நாடி ஒரு மாபெரும் பதிப்பை கொண்டு வருவதற்கு முயன்ற அந்த உழைப்புச் செம்மல், பாரதிக்கு தம்மை ஆட்படுத்திக்கொண்ட பெருந்தகை நண்பர் சீனி.விசுவநாதன்.
நாம் இரா.பத்மநாபன் அவர்களை நினைக்கிறோம். பரளி நெல்லையப்பரை நினைக்கிறோம். ஆனால், நம் கண் முன்னால் பாரதிக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு பாரதியின் கவிதைகளை தொகுதிகளாக அவர் வெளியிட்ட பெருமையை எண்ணிப்பார்த்தால்,
நான் ஒருமுறை சொன்னேன், உலக கவிக்கு வாய்த்த ஊ.வே.சா போல நீங்கள் பணியாற்றுகிறீர்கள். சீனி.விசுவநாதன் பெயரைச் சொன்னாலேயே போதும், அவர் பாரதியினுடைய ஒரு பெறாத மகனாக இருந்து அந்த பதிப்புகளை வெளியிட்டதைக் கண்டால் நம்முடைய மனம் உருகும், அவருக்கு விருது தருவதற்கு இவ்வளவு நாளாயிற்றா என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது.
இப்போதுதான் அவர்கள் பாடி முடித்திருக்கிறார்கள்.
நல்ல காலம் வருகிறது என்று.

Add a Comment