POST: 2016-02-29T16:04:24+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-3

பெருமக்களே,

நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்த்து மட்டுமில்லாமல் அரசியல் சிகரத்தில் இருந்தாலும், இலக்கியத்திற்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு கட்சியை மறந்து, நட்பிற்காக இந்த உலகம் முழுவதையும் தன்பால் அரவணைத்துக் கொள்கிற பொற்றாமரை இயக்கத்தின் தலைவர் இல.கணேசன் அவர்கள்.

அவருக்கு பகை என்று யாருமே இல்லை. அவருக்கு உறவு இந்த உலகம் முழுவதும் உறவு. அவர் செல்லுமிடமெல்லாம் பாரதி புகழையும், பாரதத்தின் பெருமையையும் பாராட்டிச் சொல்வார்கள்.

ஒரு நிகழ்ச்சியை நான் நினைத்துப் பார்க்கிறேன்.
அருமை நண்பர் கணேசன் அவர்கள், நட்பை எவ்வளவு உயர்வாகச் சொல்வார் என்பதற்கு ஒரு சான்று சொல்வதென்றால், உங்களுக்குள் பூசல் இருந்தால், அதை நான் நண்பன் என்ற முறையில் சென்று போக்கிக்கொள்ள முடியும் என்பதை நினைத்து நான் நெகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு தொடர் ஒன்று உண்டு. ஒரு நிகழ்ச்சி நடந்தபோது, நீங்கள் எங்கள் அன்புக்குரியவர் என்றாலும்கூட உங்களைத் தாண்டித்தான் எங்களின் நெகிழ்ச்சி உண்டு என்று வாழ்க்கையில் எல்லோரும் பாராட்டி புகழ்கிறவர் என்ற பெருமை இல.கணேசன் அவர்களைச் சாரும்.

அவர்களுக்கு விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பாரதியார் விழாக்கள் எங்கே நடந்தபோதும், எப்போது நடந்தபோதும், எவர் அழைத்தபோதும் முதலில் பங்கு கொள்கிறவர், பொற்றாமரையை போற்றி வளர்ப்பதை தம் கடமையாகக் கொண்டிருப்பவர் என்ற வகையில் இல.கணேசன் அவர்களை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *