மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-148
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
அவர் ஒரு வெற்றிடத்தை நிரப்ப வந்த இதமான தென்றல் காற்று என்றாலும் அதில் சூறாவளியின் சுழற்சி இருந்தது.
அவர் ஒரு தேவ வேளையின் தவ விடியல்-காலத்தின் கட்டாயம்-வசந்தத்தின் வருகை- வானத்தின் பொழிவு என்னென்னவோ சொல்லலாம்.
“ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் கப்பல் மேல் தளத்தில் நிற்கிற காட்சி-அதே போல “அடிமைப் பெண் படத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அவர் சங்கடப்படுகிற காட்சி இவைகளைப்போல ஆயிரக்கணக்கான அவரின் உருவங்கள் இலட்சக்கணக்கான மக்களின் மனத்திரைகளில் பதிந்திருக்கின்றன.
எந்த வடிவம் நிலைத்திருந்தாலும்-கற்பழிக்கப்படுகிற பெண்ணை முரட்டுத்தனமாக கயவர்களிடத்திலிருந்து-பாய்ந்து சென்று காப்பாற்ற வேண்டும் என்கிற உணர்வு நம்மை உந்தித் தள்ளுகிறபோது-நமது நெஞ்சில் நிலைக்கிற கதாநாயகன் முந்திக் கொண்டு-பெண்ணைக் காப்பது நாமே காப்பதுபோல-அதிலே ஏற்படுகிற நெஞ்சார்ந்த திருப்திகரமே நம்மை அவரோடு பிணைத்து வைக்கிறது.
பத்துப் பேரை ஒரே தட்டில் அடித்து வீழ்த்தி விடலாம் என்கிற கராத்தே கலைக் கருவாகவே இருந்த காலத்தில் நம்மால் இயலாத ஒன்றினை இயற்றிக் காட்டுகிற புரட்சி நடிகர் நமது நெஞ்சத்தில் நிலைத்து விட்டதில் வியப்பதற்கொன்றுமில்லை.

Add a Comment