POST: 2017-05-04T10:11:52+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================

சிறப்புரை
==========

பகுதி-26
————-

இந்தச் சமயத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். வாய்த் திறந்தால், வண்ணம் பாடுவேன் என்று என்னிடத்தில் ஒருவர் வந்தார். கடிகமணிச் செங்கல்வராயர் என்ற பேரறிஞரின் வீட்டு வாசலில், அவரைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்புத் தர வேண்டும். உங்களது கண்கள், எனக்கு எப்படியாவது வாய்ப்புத் தருவேன் என்று ஊக்கப்படுத்துவது போல உள்ளது என்று ஒரு பொய்ப்பாட்டுச் சொன்னார். அவரை எப்படியாவது அனுப்பினால் போதும் என்று நினைத்தேன்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்று, என் பெயரைச் சொல்லுங்கள், தக்க வேலைக் கிடைக்கும் என்று சொன்னேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த இயக்குநரே, என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். அவர் என்மீது மதிப்புக் கொண்டவர். பெருமகன் ஒரு மாபெரும் தமிழ்ப்புலவர் என்னிடத்தில் வந்திருக்கிறார். அவரிடம் அருளாற்றல் இருப்பதினால், வாய்திறந்தால் பாட ஆரம்பிக்கிறார். இரண்டாயிரத்து ஐந்நூறு சம்பளம் கொடுத்து, அவரை வேலையில் அமர்த்த விரும்புகிறேன். இது பற்றிய கோப்புகளை அனுப்பலாமா என்று கேட்டார். உள்ளுக்குள் நகைத்துக்கொண்டு, சரி அனுப்புங்கள் என்று சொன்னேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *