POST: 2018-12-05T09:51:21+05:30

அண்ணல் நமசிவாயம் நம்மை விட்டு அகன்றாரே !
======================================

நெல்லை தந்த பெருமக்களை நினைக்கும்போதெல்லாம் உழைப்பாலும் ஊக்கத்தாலும் ஒப்பற்ற திறமையாலும் வளர்ந்த தகைமையாளர்கள் பலருள் பெருந்தகை நமசிவாயம் இந்தியப் பெருநிலமே பாராட்டிய பெருமை வாய்ந்த இந்தியக் கடலோடி வங்கியின் இணையற்ற தலைவராக மிளிர்ந்தார்.

தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் சென்னையில் இவரைப் போற்றிக் குறிப்பிட்டார் .

அண்ணலால் வளர்ந்தவர்கள் , பல்லாயிரம் பேர் என்றால் எண்ணி முடியாது ,பலர் அவருக்கு நன்றி செலுத்தி நாள்தோறும் நெகிழ்வதை நானறிவேன்.

இனப்பற்றும் மொழிப்பற்றும் சிவநெறியும் ததும்பி வாழ்ந்த நமசிவாயம் அவர்கள் தொண்ணூற்றைத் தொடுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.

அண்ணல் பிரிவு ஆழ்ந்த அவலத்தைத்
தருகிறது.

—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *