POST: 2018-04-03T10:47:54+05:30

உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை
– 37வது நினைவு நாள்
==============================================

இந்த நினைவு நாளை என் இளவல் டாக்டர் மெய்கண்டான் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையிலும் திருவருட்பா பாடலை நெகிழ்ந்துருகி பாடும் திருமதி.சீதா மெய்கண்டான் அவர்களின் இசை அரங்கையும் அமைத்திருக்கிறார்.

கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியாதான் ஒரு தம்பி” என்ற தொடர்தான் என்னை உருக வைக்கிறது.

ஈடில்லா இணையராகத் திகழும் பேராசிரியர், திரு.மோகன், பேராசிரியை திருமதி.நிர்மலா மோகன், இருவரும் “உரைவேந்தர் ஔவை துரைசாமி” என்னும் தலைப்பில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அண்மையில் உரையாற்றிச் சென்றனர்.

ஒளவை துரைசாமியின் அளப்பெரும் புகழ், என்றும் நம்மைக் களிப்பில் ஆழ்த்தும்!

—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *