POST: 2018-02-27T10:16:23+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-176
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

காட்சி :
————

அன்னை சத்யா (1953) மரணம்.
எம்.ஜி.ஆர். துயரம். அன்னையின்
விருப்பத்தின்படி, அவர் வாழ்ந்து
மறைந்த லாயிட்சு சாலை
இல்லத்தை விலைக்கு வாங்கி
அன்னையின் பெயர் சூட்டினார்.

காட்சி :
————

’மலைக்கள்ளன்’ படம் மகத்தான
வெற்றியடைகின்றது(1954).
இந்திய அரசு வெள்ளிப்பதக்கத்தைப்
பரிசாகப்பெறுகின்றது.

காட்சி :
————

எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் இணைந்து
நடித்த முதல் படம்(ஒரே படம்) ’கூண்டுக்கிளி’
வெளிவந்தது.

காட்சி :
————

குலேபகாவலி, முதல் வண்ணத்தமிழ்ப்
படமான *அலிபாபாவும் நாற்பது
திருடர்களும், *மதுரை வீரன்,
*தாய்க்குப்பின் தாரம், *சக்கரவர்த்தித்
திருமகள்,*மகாதேவி, புதுமைப்பித்தன்,
ராஜராஜன் ஆகிய படங்கள் அவருடைய
புகழுக்குப் புகழ் சேர்த்தன. பல படங்கள்
சாதனை படைத்தன.

காட்சி :
————

நேருவுக்குக்
கருப்புக்கொடி காட்ட அண்ணா முடிவு.
கழகத்தலைவர்கள், எம்.ஜி.ஆர். கைது. (4.1.1958)
முதல் சிறைவாசம். சில நாட்களில் விடுதலை.

காட்சி :
————

‘நாடோடி மன்னன்’ படத்தைத்தயாரித்து
இயக்கி, நடித்து வெளியிட்டார்.
‘நாடோடி மன்னன்’ படத்தில்
திட்டங்களை வெளியிடும் காட்சி.
‘சும்மாக்கிடந்த நிலத்தை’- பாடல்

காட்சி :
————

மதுரையில் 110 சவரன் கொண்ட
மணிகள் பதித்த தங்க வாள் பரிசளிப்பு.
நாவலர் வழங்குகிறார். மதுரை முத்து
நடத்திய மாபெரும் விழா.(16.10.59)

காட்சி :
————

சென்னையில் ‘நாடோடி மன்னன்’ பாராட்டு
விழா. 5 ½ அடி உயர மிகப்பெரிய வெள்ளிக்
கோப்பை பரிசளிக்கப்படுகின்றது.
பேரறிஞர் அண்ணா பாராட்டுகிறார்.
நிகழ்ச்சியின் காட்சி
அல்லது புகைப்படம்

காட்சி :
————

தமிழ் நடிகர் சங்கத்தலைவரானார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்று
பெயர் மாற்றம் செய்தார்.
‘நடிகன் குரல்’ மாத இதழ் துவங்கப்பட்டது.
இதழின் ஆசிரியரானார்.

காட்சி :
————

புரட்சி நடிகர், கலைச்சுடர், நடிக மன்னன்,
கலை மன்னன், மக்கள் நடிகன், மக்கள் கலைஞன்,
மக்கள் திலகம், நிருத்தியச் சக்கரவர்த்தி,
பொன் மனச்செம்மல் என்ற பட்டங்களும்
பரிசுகளும் பல ஊர்களில் எம்.ஜி.ஆருக்கு
வழங்கப்படுவதை அரங்குகளில் மாற்றி மாற்றி
காண்பிக்கலாம். புகைப்படங்களையும்
பயன்படுத்தலாம். சென்னை மாநகராட்சி, பல நகராட்சிகள் பாராட்டு.

உதாரணம்: ’பொன் மனச்செம்மல்’பட்டத்தை
வழங்கியவர் திருமுருக கிருபானந்த வாரியார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *