POST: 2018-02-16T09:41:38+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-169
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

காட்சி:
———–

சத்யபாமா தனது (2 வயது) மகன் எம்.ஜி.ஆரைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். வீட்டுச் சொந்தக்காரி ஏற இறங்கப் பார்த்துவிட்டு அலட்சியமாகப் பேசுகிறாள்.

வீட்டுக்காரி:
——————–

வேலைக்கு உன்னை வைச்சா.. நீ…. உன் கைக் குழந்தையையும் தூக்கிக்கிட்டு வர்றியேடி..! இங்கே நீ வேலையைப் பார்ப்பியா? உன் குழந்தையைக் கவனிப்பியா?

சத்யபாமா:
——————-

(கோபமாக) எனக்குச் சத்யபாமா, சின்னம்மா, கண்ணச்சியம்மான்னு மூணு பேரு இருக்கு! ஏதாவது ஒரு பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க. இப்படி….. வாடி.. போடின்னு கூப்பிட்டா நானும் சொல்லும்படி இருக்கும்.

வீட்டுக்காரி:
——————–

அம்மாடியோ…. நான் இப்ப……. என்னடி……. ஹூம்… இல்லே தப்பும்மா…….. சத்யா…! என்ன சொல்லிட்டேன்.

சத்யா:
———–

வழியத்துப்போயி, வேலைக்காரியா வந்தவதானே, நாம வசதியா இருக்கோம்ங்கிற எண்ணத்திலே வார்த்தைகளைக் கொட்டீட்டீங்க…! நானும், உங்களைவிட வசதியா வாழ்ந்தவதான். ஏதோ என் போதாத காலம், இந்தக் கோலத்தோட வேலை செய்யத்தான் வந்திருக்கேன்…….. மானம், ரோஷத்தையெல்லாம் விட்டுவிட்டு வரலேம்மா……….

வீட்டுக்காரி:
———————

சரி…. சரி… சத்யபாமா…. நான் ஒண்ணு கேப்பேன்….. கோவிச்சுக்கமாட்டியே…?

சத்யா:
———–

என் கோபம் உங்களை என்னம்மா செய்துடும். இல்லாதவ நான், இருக்கிறவுங்க நீங்க. சொல்லாலே கொல்லாமே இருந்தாச்சரி!

வீட்டுக்காரி:
———————

ஆமா… கண்ணச்சியம்மா…. சத்யபாமா…. ஏம்மா வைச்சுண்டு படாதபாடுபடுறே! இந்தக் குழந்தை அழகா…. லட்சணமா இருக்கு. நேக்கும் பிடிச்சிருக்கு. உனக்குக் கை நிறைய பணம் தர்றேன்…. இந்தக் குழந்தையைக் கொடுத்துடேன்.

சத்யா:
———–

கை நிறையப் பணம் கொடுத்தாலும் இந்தப் பிள்ளையைப் பெத்தவ மனம் நிறையாது. விக்கிறதுக்கு நான் பிள்ளையைப் பெக்கலை. ஏதோ…. கஷ்டமா இருக்கேன்னு உங்க வீட்டு வாசல்படியை மிதிச்சேன். நீங்க என்னை மதிக்காதது மட்டுமில்லே, நெஞ்சிலே மிதிக்கிறீங்க. போதும்மா….. உங்க சகவாசம்! நீங்களும்… உங்க வேலையும்…..

சத்யபாமா குழந்தையுடன் குமுறியபடி வெளியேறுகிறாள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *