மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 58)“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (VI)”முனைவர் ஔவை நடராசன்,மேனாள் துணைவேந்தர்தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்காட்சி – 56புரட்சி நடிகர், கலைச்சுடர், நடிக மன்னன், கலை மன்னன், மக்கள் நடிகன், மக்கள் கலைஞன், மக்கள் திலகம், நிருத்தியச் சக்கரவர்த்தி, பொன் மனச்செம்மல் என்ற பட்டங்களும் பரிசுகளும் பல ஊர்களில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்படுவதை அரங்குகளில் மாற்றி மாற்றி காண்பிக்கலாம். புகைப்படங்களையும் பயன்படுத்தலாம். சென்னை மாநகராட்சி, பல நகராட்சிகள் பாராட்டு.உதாரணம்: ’பொன் மனச்செம்மல்’ பட்டத்தை வழங்கியவர் திருமுருக கிருபானந்த வாரியார்.காட்சி – 57தாய் மகளுக்குக்கட்டிய தாலி, பாக்தாத் திருடன், மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், சபாஷ் மாப்பிளே, தாய் சொல்லைத்தட்டாதே, திருடாதே, குடும்பத்தலைவன், மாடப்புறா, பாசம், ராணி சம்யுக்தா, தாயைக்காத்த தனையன், விக்கிரமாதித்தன் ஆகிய படங்கள் வெளிவந்தன.படக்காட்சிகள் அல்லது ஒளிப்படங்கள்காட்சி – 58நாடகக்குழுவைத்துவங்கி,’இன்பக்கனவு’, ‘இடிந்த கோயில்’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய நாடகங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தினார். 1953 முதல் 1963 வரையில் பல பொது நல அமைப்புகள் நாடகங்கள் நடத்திப் பயன்பெற்றன. கல்லூரிகள், பள்ளிகள் உயர்ந்தன. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். தியாகராயர் கல்லூரிக்கு நிதி திரட்ட உதவினார். பம்பாய்த் தமிழ்ச்சங்கக்கட்டிட நிதிக்கு உதவி. மழைக்கோட்டு ரிக்ஷாத்தொழிலாளர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார்.காட்சி – 59சீர்காழியில், நாடக மேடையில் குண்டுமணியைத் தூக்கிப்போட்டபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. (1959)நாடக மேடையில் கண்ணீர் விட்டு அழுதவர்களை எம்.ஜி.ஆர். தேற்றிய மன உறுதி. காட்சி – 60செய்தி கேள்விப்பட்டு, வி.என்.ஜானகி பதறியபடி ஓடிவந்தார். அப்போது இரண்டாவது மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்தார். எம்.ஜி.ஆருடன் ஒரே இல்லத்தில் அவருக்கும் சதானந்தவதிக்கு உதவியாக இருந்தார்.காட்சி – 61பொதுத்தேர்தலில் சூறாவளி சுற்றுப் பயணம். (1957)“கழகத்திற்கு நிதியளிப்பதைவிட, உன் முகத்தைக்கண்டால் லட்சோப லட்சம் மக்கள் வாக்களிப்பார்கள். அப்படி ஆதரவைத்திரட்டு” என்று அண்ணா கூறினார்.இயக்கம் 15 இடங்களில் வெற்றி. பேரறிஞர் அண்ணா தலைமையில் கழகம் சட்டப்பேரவையில் புகுந்தது.காட்சி – 62மாநகராட்சித்தேர்தல்களில் கழகம் வெற்றிபெற எம்.ஜி.ஆர். அரும்பணி. (1959-1964)காட்சி – 63பொதுத்தேர்தலுக்காகப்பிரச்சாரம். (1962) 50 பேர் தேர்வு. காட்சி – 64தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக ( MLC) அண்ணாவின் விருப்பத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். (1963)கருத்து வேறுபாடு கொண்ட மற்றவர்கள் சொற்களால் ஆத்திரம் கொண்டு பதவியை உதறி எறிந்தார்.காட்சி – 65ஆனந்த ஜோதி, தர்மம் தலைகாக்கும், கலை அரசி, காஞ்சித்தலைவன், கொடுத்து வைத்தவள், நீதிக்குப்பின் பாசம், பணத்தோட்டம், பரிசு, பெரிய இடத்துப்பெண், தெய்வத்தாய், என் கடமை, படகோட்டி, பணக்காரக்குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன் ஆகிய படங்கள் வெளிவந்தன.படக்காட்சிகள் அல்லது ஒளிப்படங்கள் காண்பிக்கலாம்.காட்சி – 66‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடிக்க மலர்களால் அமைந்த ஆடை அணிந்து மங்கை ஒருவர் வருகிறார். அவர்தான் புரட்சிச்செல்வி ஜெயலலிதா அவர்கள்.புதுமுகமான அவரை மக்கள் திலகம் அரங்கத்திற்குள் நுழைந்ததும்… ‘நல்வரவு’… ‘WELCOME’ என்று கூறி வரவேற்கிறார். அவர் வணக்கம் தெரிவிக்கிறார்.காட்சி – 67‘ஆயிரத்தில் ஒருவன்’ படக்காட்சி. பாடல்காட்சி!காட்சி – 68ஆசைமுகம், எங்க வீட்டுப்பிள்ளை, கலங்கரை விளக்கம், கன்னித்தாய், பணம் படைத்தவன், தாழம்பூ, அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா, தாலி பாக்கியம், தனிப்பிறவி, அரசக் கட்டளை, காவல்காரன், தாய்க்குத்தலைமகன், விவசாயி, ரகசியப்போலீஸ் 115, தேர்த்திருவிழா, குடியிருந்த கோயில், கண்ணன் என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு, காதல் வாகனம், அடிமைப்பெண், நம்நாடு…படக்காட்சிகள்… பாடல்காட்சிகள் தொகுப்பு காண்பிக்கலாம்.காட்சி – 69துப்பாக்கியால் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டார். (12-1-1967) இராமாவரம் தோட்டத்திலிருந்து இருவரையும் இராயப்பேட்டை மருத்துவ மனைக்குக் கொண்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர். அருகிலேயே டாக்டர்கள்எல்லோரும் சூழ்ந்து கொண்டு, அவரைக் காப்பாற்றப் போராடுகின்றனர். “அண்ணனைப்போய் கவனியுங்கள். அவரைக்காப்பாற்றுங்கள்” என்று டாக்டர்களிடம் வேண்டுகோள் விடுத்த அரிய பண்பு. மறுபிறவி எடுத்தார். குண்டு ஒன்று, பிரிய மனமின்றி அவரது தொண்டையில் தங்கிவிட்டது.காட்சி – 70அவரது படத்தை ஒட்டித் தேர்தல் பிரச்சாரம். காட்சி – 71பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி.ஆர் அமோக வெற்றி. பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி மலர்கிறது. ஆட்சியை அண்ணா பெரியாருக்கும் காணிக்கையாக்குவதாக அறிவிக்கிறார்.காட்சி – 72எம்.ஜி.ஆரை, தமிழ்நாடு சிறுசேமிப்புத் திட்டத் துணைத்தலைவராக நியமிக்கிறார். அண்ணா.காட்சி – 73இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடைபெறுகின்றது. தமிழ் மாநாடு மலர் வெளியிடும் குழு உறுப்பினராக எம்.ஜி.ஆர் பணிபுரிகிறார். அண்ணா பாராட்டு. சென்னை அண்ணா சாலையில் எம்.ஜி.ஆர் தன் சொந்தச் செலவில் பேரறிஞர் அண்ணா சிலை அமைத்தார். டாக்டர். ஏ. ராமசாமி முதலியார் திறந்து வைக்கிறார். தமிழ் மாநாடு ஊர்வலம் மற்ற கட்சிகள்… அண்ணா சிலை திறப்பு படம் காண்பிக்கலாம்.காட்சி – 74‘அடிமைப்பெண்’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகராக சிங்கப்பூர் சினிமா ரசிகர் சங்கம் எம்.ஜி.ஆரைத் தேர்ந்தெடுத்தது. பிலிம்பேர் பரிசு கிடைக்கிறது. தமிழக அரசு பரிசு வழங்குகிறது. (முதன் முதலாகப் புரட்சித்தலைவி பாடிய திரைப்படப்பாடல்) “அம்மா என்றால் அன்பு” பாடல் காட்சி (அடிமைப்பெண்) இடம்பெறலாம்.‘நம்நாடு’ படத்திற்குச் சினிமா ரசிகர் சங்கம் பரிசு பாடல் காட்சி காட்சி – 75பேரறிஞர் அண்ணா மறைவு.(3.2.1969) இராஜாஜி மண்டபத்தில் அண்ணாவின் உடலை, அவரது அன்னையருக்குக் (எம்.ஜி.ஆர்.) காண்பித்தல். இறுதி ஊர்வலத்தில் வேன் மீது சோகமாக அமர்ந்து செல்வது. அண்ணா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது மயங்கி விழுகிறார். படக்காட்சித்தொகுப்பு திரையிடலாம்.காட்சி – 76கலைஞர் கருணாநிதியை முதலமைச்சராக்கப் பாடுபடுகிறார். அவர் முதல்வராகிறார். காட்சி – 77டாக்டர் நாவலர் பொதுச்செயலாளராகவும், கலைஞர் கருணாநிதி இயக்கத்தலைவராகவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.காட்சி – 78பொதுத்தேர்தலில் (1971) கழக வெற்றிக்காக இரவு பகலாகத்தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டுகின்றார். மீண்டும் கழகம் அமோக வெற்றி! பரங்கி மலைத்தொகுதியில் எம்.ஜி.ஆர். வெற்றி பெறுகிறார்.காட்சி – 79எம்.ஜி.ஆருக்கு ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ பரிசு வழங்கப்படுகிறது.(1971)காட்சி – 80சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் புரட்சிச்செல்வி, மக்கள் திலகத்தைப் பாராட்டுகிறார். காட்சி – 81சிங்கப்பூரில் பாராட்டு. புரட்சிச்செல்வி மக்கள் திலகத்தைப் பாராட்டுகிறார்.(10.7.72)காட்சி – 82எம்.ஜி.ஆர். மன்றங்களின் ஆலோசனைக்கூட்டம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முழக்கம்.காட்சி – 83மாட்டுக்கார வேலன், என் அண்ணன், தலைவன், தேடிவந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், சங்கே முழங்கு, நல்ல நேரம், ராமன் தேடிய சீதை, அன்னமிட்ட கை, நான் ஏன் பிறந்தேன், இதய வீணை படக்காட்சிகள்… பாடல்காட்சிகள்… காண்பிக்கலாம்!“செத்துபிழைச்சவன்டா” எங்கள் தங்கம் படப்பாடல் இடம்பெறலாம்.காட்சி – 84திருக்கழுக்குன்றத்தில் கணக்குக்கேட்டு புரட்சித்தலைவர் முழங்குகிறார். (8.10.72) கும்பகோணம் பள்ளியில் பானைக்கு வசூல் செய்த பள்ளி மாணவத் தலைவனிடம் கணக்குக்கேட்ட சிறுவன் எம்.ஜி.ஆர். இரு காட்சிகளை இரு அரங்குகளில் மாற்றி, மாற்றிக் காண்பிக்கலாம்.காட்சி – 85புரட்சித்தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்.(10.10.1972) அவரது பேச்சு, அறிக்கையை ‘தென்னகம்’ இதழில் வெளியிட்டதற்காகக் கே.ஏ.கே. நீக்கம். நாடு முழுதும் கொந்தளிப்பு. பல்லாயிரக்கணக்கானோர் கைது.காட்சி – 86அண்ணா தி.மு. கழகம் துவக்கம். கழகக்கொடியின் அமைப்பைப் புரட்சித்தலைவர் வெளியிடுகிறார். அமைப்பாளராகக் கே.ஏ.கே.யை நியமிக்கிறார். கழகத்தில் லட்சக்கணக்கானோர்காட்சி – 87‘உலகம் சுற்றும் வாலிபன்’ வெற்றியைத் தடுக்க முயற்சி. சுவரொட்டி ஒட்டத்தடை. சென்னையிலும் தமிழகம் முழுதும் படம் மாபெரும் வெற்றி !‘சிரித்து வாழவேண்டும்’ பாடல் காட்சி காண்பிக்கலாம்.காட்சி – 88பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று, இன்று, நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழவேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, பல்லாண்டு வாழ்க , இதயக்கனி, நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் படக்காட்சிகள்….“நாளை நமதே எந்த நாளும் நமதே” (நாளை நமதே)“நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற…” (இதயக்கனி) பாடல் காட்சிகள் இடம் பெறலாம்.காட்சி – 89அண்ணா தி.மு.கழகம் பெற்ற முதல்வெற்றி. திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி புரட்சி தலைவர் தலைமைக்கு ! (22-5-1973) மாயத்தேவர் தேர்வு.காட்சி – 90சோவியத் ரஷ்யா, லண்டன், பாரீஸ், நைரோபி ஆகிய வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் புறப்படுதல் – (1-7-1973)காட்சி – 91தாயகம் திரும்புதல். சென்னையில் அமோக வரவேற்பு. (18-8-1973) படக்காட்சி காண்பிக்கலாம்.காட்சி – 92கட்சியின் கொள்கை ‘அண்ணாயிசம்’ அறிவிப்பு. (29-9-73)காட்சி – 92கழகப் பொதுச்செயலாளராக ஏகமனதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தேர்வு. (4-1-74)காட்சி – 93புதுவையில் 11 இடங்களில் கழகம் வெற்றி. (22.2.74) கோவை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி. புதுவையில் கழக அரசு (16.4.74) பதவி ஏற்பு.காட்சி – 94அமெரிக்காவில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களான விஸ்கான்சின், சிகாகோ, பெர்க்லி, கலிபோர்னியா, பெனிசில்வேனிய ஆகியவைகளின் அதிகாரப்பூர்வமான அழைப்பு. (25.10.74) புரட்சி தலைவர் அமெரிக்கா சென்று திரும்புகிறார். மக்கள் மகத்தான வரவேற்பு.காட்சி – 95குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் 31.1.76.காட்சி – 96பொதுத் தேர்தல், புரட்சி தலைவர் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம். பிரதமர் இந்திராவுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டங்கள். (படக்காட்சி) காட்சி – 97புதுவை உள்பட 40 இடங்களில் புரட்சி தலைவர் தலைமையில் போட்டியிட்ட கழக முற்போக்குக் கூட்டணி 36 இடங்களில் வெற்றி. (20.3.77)தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…- ஔவை நடராசன்தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment