POST: 2020-10-29T09:55:02+05:30

உள்ளார் அம்மா உள்ளத்தில் என்றும் !.

1 நற்றமிழ் தன்னை நன்கு
கற்றோர்நம் அன்னை தாரா
குற்றமே இலாது சற்றும்
குழந்தைகள் படித்துப் பார்த்தே,
குற்சித்தல் சற்றும் இன்றிக்
குழந்தைக்(கு) அறிவு றுத்தி
உற்றிட அவர்கள் மேலும்
உயர்நிலை பெறப்பின் நாளில்.

2. நாமெலாம் போற்றும் அன்னை
நன்னகர் சென்னை தன்னில்
நாமறி பதினைந் தாம்நாள்,
நல்லேழாம் மாதம் மேலும்,
சாலஒன் றொண்ப தோடு
முப்பத்தி ரண்டாம் ஆண்டு
மேலுயர் வோடு மிக்க
மேன்மையாய்ப் பிறந்தார் அம்மா.

3. எளியதோர் குடும்பத் தோடு
திருவண்ணா மலையைச் சார்ந்த
விளங்காத மங்க ளத்தை
விரும்பிய வண்ணம் வந்தார்.
துளக்கமாய்த் தொடக்கப் பள்ளி,
தொடர்ந்தனர் மாசில் லாமல்
வளங்கெழு ஆசான் வந்தார்
வளர்சென்னைக் குடும்பத் தோடு.

4. வேலூரில் கல்வி பெற்ற
மிகுபுகழ் டாக்டர் தாரா
மேலும்வி சாகமத் தில்தான்
மேல்மருத் துவமும் பெற்றார்.
ஏலுமாய் மருத்து வத்தில்
ஏற்றமாய் அறிவும் பெற்றார்.
மேலும்உயர் பட்டம் எல்லாம்
குழந்தைநலப் பிறப்பில் பெற்றார்.

5. குழந்தைகள் நலத்தைப் பற்றிக்
குறையிலாப் பட்டம் பெற்றார்.
குழந்தைஎம் தெய்வம் என்றே
கூறுவர் மக்கள் எல்லாம்!
சழக்கமென் றொன்றில் லாமை
சான்றாமை பணிக்கே ஆகும்!
ஒழுக்கம்நற் பணிசெய் தல்தான் உற்றன அவர்தம் வாழ்க்கை!
6. சென்னைக்கஸ் தூரி காந்தி
சேய்நல மருத்து வம்தான்
சென்னைசார் குழவி காத்தல்
மருத்துவர் தாரா அம்மா.
தன்குறிக் கோள்வ ராகத்
தன்னைச்செய் தார்மரைக் காயர்.
எண்பத்தே ழகவை தன்னில்
எலாம்போற்ற ஓய்வு பெற்றார்.

7. தம்இல்லம் சுற்றி வாழ்ந்த
தாழ்ந்துந லிந்த வர்க்குத்
தம்பணிக்குப் பணமே இன்றித்
தமதுமுன் வாழ்ந்த ஏழை
எம்மதத்தைச் சேர்ந்தோர்க் கெல்லாம்
எலார்க்குமே இரக்கத் தோடே
அம்மைஎப் பணம்பெ றாமல்
அனைவர்க்கும் உதவி செய்வார்.

8. தன்னுடைக் குறிக்கோள் மேன்மை,
தந்துயர்த்தி யோர்மரைக் காயர்;
இன்னொருவர் ஆச்சா ரையாம்.
என்றுமம்மா எவர்க்கும் சொல்வார்.
இன்னும்மேல் தாரா அம்மாள்
தம்அகவை எண்பத்(து) ஏழில்
தென்மதுரை மருத்து வம்தான்
இராசாசி மருத்து வம்ஆம்.

9. தம்மிடைவாழ் தலைச்சி றந்த
குழந்தைநல மருத்துவ ராமே!
நம்பித்தன் னைஅடைந் தார்க்கு,
நாடிப்பணம் கேளா மல்தான்
நம்பவனாய் அனைத்தும் பெற்றே
ஆவன எல்லாம் செய்து
செம்மையாய் நலம்பெற் றோர்கள்
திருந்தித்தம் இல்லம் செல்வர்.

10. மருத்துவர் மகளிர் சங்க
மாபெரும் தலைவ ராகக்
கருத்துடன் நற்பணி யாற்றி
மதுரையில், சென்னை தன்னில்,
பெரும்புகழ் பெற்றப் பெண்டிர்
மருத்துவர் மாநா டென்று
பெருமையாய் நடத்திக் காட்ட,
எல்லோரும் நினைத்து யாக்கை

11. தமிழக அரசின் சார்பில்
இலிபியா நாட்டி னர்க்கும்
அமிழ்தான பெருமை பெற்ற
குழந்தைநல் மருத்துவ ராக
அமைந்தநல் மருத்துவ ராக
அனுப்பப் பட்ட பேரும்
அமைந்தவர் மருத்துவர் தாரா
குழந்தைகளின் தெய்வம் என்பர்!

மருத்துவர் முருகு துரை
மலேசியா .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *