POST: 2020-05-09T10:40:17+05:30

எட்டி நின்று மனதைத் தொட்டவர்!
=========================

ஔவை – 85
============

திரு.நந்தன் மாசிலாமணி
உரிமையாளர்,
கலைஞன் பதிப்பகம்.

“பதிப்புத் திலகம் மாசிலாமணி இயற்பெயர் மட்டுமில்லை. அவருக்கு காரணமான பெயர் எந்த நிலையிலும், அவர் தன் கருத்தை தெளிவாகவும் இனிமையாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் வலியுறுத்துவார். என்னுடன் பணியாற்றிய அலுவலர்கள் அனைவரும் மாலை 04.00 மணியானால், இன்னும் மாசிலாமணி சாரை காணோமே காணோமே என்று ஆவலாகக் காத்திருப்பார்கள். எவ்வளவு பேர் காபி அருந்தி கருத்துச் சொன்னாலும் ஐயா சொல்வதுபோல முக மலர்ச்சியோடு யாரும் சொல்ல முடியாது என்று என் அலுவலக பணியேற்றிருந்த கணிப்பொறியாளர் திருமதி லட்சுமி நெகிழ்ச்சியாகக் கூறுவார்.
இந்திய நிதியமைச்சர் தொடங்கி, பிரபலங்கள் பலரோடு பழகியது மட்டுமல்லாமல் தேசிய மனமும் கொண்டிருந்து ஏறத்தாழ தமிழுலகம் முழுவதையுமே தன் வாழ்நாளில் அளந்தறிந்த அன்பாளர் அவர். போதும் என்ற மனம் அவருக்கு எப்போதும் தெளிவூட்டியது. நீங்கள் வரவில்லை என்றாலும், உங்கள் அலுவலகத்தில் என் மீது நண்பர்கள் பொழிகிற அன்பை நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன். கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தியாகராய நகர் பூங்காவில் நடக்க வைத்ததும் தன் நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டதையும் நினைவு கூர்கிறேன். மற்ற காலத்தில் அருள் மாமனார் தன்னோடு பழகியிருந்ததையும் தன் வீட்டில் தங்கியிருந்ததையும் குறிப்பிட்டார். எந்தக் கவலையும் இல்லை. நான் எதிர்பார்த்ததைவிட நந்தா தன் பொறுப்பில் மிகச் சிறப்பாக பணியாற்றுகிறார். எனக்கு அவனால், பெரும் புகழ் சேர்கிறது. இதை மட்டும் நந்தாவிடம் சொல்லாதீர்கள் என்று சிரித்துக் கொண்டு சொன்னார். நந்தா விளக்கு உங்கள் குடும்பத்தில் சுடர் விடுகிறது என்று சொன்னபோது தன் குடும்ப மரபின் பெருமையை நினைந்து மெல்ல நாணம் படர்ந்தது என்று இவ்வாறு ஔவை எழுதியிருந்த தாளை அருள் டத்தோ இந்த மின்னஞ்சலைப் பாருங்கள் என்று சொன்னார். அது என்னவோ என்னை அண்ணன் என்று அழைக்காமல் டத்தோ என்ற மலேசிய விருதை சொல்லி அழைக்கிற வழக்கம் அருளுக்கு உண்டு- ”

இனி நான் எழுதுகிறேன்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் நூல் வெளியீட்டு விழாவில் முதல் முறையாக இவரைப் பார்க்கிறேன். வேறு ஒரு நிகழ்ச்சிச் செல்வதால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்லி கட்டிப் பிடித்து கொண்டுக் கிளம்புகிறார். ஆச்சரியமாகப் பார்க்கிறேன், அப்பாவிற்குத் தொடவே பிடிக்காது. இவர் இப்படி. ஔவைக்கு மட்டுமே அந்தச் செல்ல உரிமை!.

தந்தையார் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மாறாத பற்றுள்ளவர். 1970 தொடக்கத்தில் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஔவை இருப்பார். ஆங்கிலத்திலும் அருமையாகப் பேசுவார்.

பத்து நிமிடம் புத்தகத்தைப் பற்றிச் சொன்னால் போதும், ஒரு முறை புரட்டிப் பார்ப்பார்கள், அவ்வளவு தான். மேடையில் இவர் பேசுவதைக் கேட்கும் போது யார் நூலாரியர் என்ற சந்தேகம் வரும்?. புத்தகத்தின் மையக் கருத்து, அதை ஒட்டிய செய்திகள், அதற்குச் சம்பந்தப்பட்ட பிற செய்திகள் என எழுதிய ஆசிரியரைத் திகைக்க வைத்து விடுவார்.

தி. நகரில் இருக்கும் அந்த கடைசி பத்து ஆண்டுகள் தினமும் ஔவையும், தந்தையாரும் சந்தித்து அளவளாவுவார்கள்.

தந்தையாருக்கு உற்ற தோழர். இருவேறு எண்ணங்களை ஒரே முகமாகத் தழுவிக் கொண்டவர்கள்.

பல்வேறு ஆரம்ப கால எழுத்தாளர்களை ஆற்று படுத்தியவர். அதில் வைரமுத்துவும் ஒருவர்.

ஔவையின் சரித்திரத்தைப் புத்தகமாக வெளீயீட வேண்டும் எனப் பல ஆண்டுகளாக திட்டமிட்டுக் கொண்டு இருந்தார்கள். முதலில் ஒருவர் ஆரம்பித்து வைக்க, பிறகு ஒருவர் தொடர என போய்க் கொண்டு இருந்தது. அவருடைய மகன் அருளுக்குப் புத்தகம் வர வேண்டும் என்ற முனைப்புடன் வேலை செய்கிறார். அவ்வைக்கு அதிலெல்லாம் பெரிய ஆர்வம் இல்லை. வந்தால் சரி, இல்லை என்றாலும் சரி என்ற மனநிலை தான். பற்றுஅற்ற நிலை. இதற்கும் மட்டுமல்ல அனைத்து விஷயங்களிலும் அப்படித் தான்.

மதுரையில் இருந்து வரும் போது ஔவைக்கு உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவிற்கு நிலை கொள்ள வில்லை. புத்தகத்தை முடித்து அவரிடம் எப்படியாவது கொடுக்க வேண்டும் என்று தவித்தார்.

சரி என்று அடித்துப் பிடித்து கொண்டு முடித்து விட்டால், அருளுக்கு அங்கங்கே மாற்றம் செய்ய வேண்டும் என்று பல உண்மைகள் அப்படியே பதிவு ஆகியிருக்கின்றது. அருள் எது செய்ய முடியுமோ அதைத் தான் செய்யமுடியும், நீங்கள் நினைப்பது போல் செய்ய முடியாது என்று சொல்லி முடித்துத் தந்தேன். கால அவகாசம் இல்லை.

ஏன் என்றால் தலைப்பு அப்படி அருளுக்கு ஔவை சொன்னது!. புத்தகம் வந்தது, அவரும் வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டார். இது நடந்தது 9 ஆண்டுகளுக்கு முன்பு.

என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து என்னை கவர்ந்த இலக்கியப் பேச்சாளர் ஔவை ஐயா அவர்கள்தான். அவருடன் அதிகம் பழகினோனோ இல்லையோ அவருடைய மகன் அருள் எனக்கு இனிய நண்பர் ஆவார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *