POST: 2020-04-25T10:19:27+05:30

சான்றோர் பலர் யாம் வாழும் உலகே !
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

பேராசிரியர் இராம.குருநாதன் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியை தினமணி இதழ் நடுப்பக்கத்தில் வெளியிட்டு, புகழ் சேர்த்தது என்னை நெகிழ வைக்கிறது.

அந்த நிலையில்தான் என் பிறந்தநாள் உலகுக்கெல்லாம் தெரிந்துவிட்டது. என்னைவிட மூத்த இதழ் தினமணியின் பெருந்தன்மைக்கு நான் நன்றியுரைக்கிறேன்.

ஒப்பற்ற அரசியல் தலைவர்கள், ஈடில்லா தமிழறிஞர்கள், தமிழ் வளர்ச்சித்துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள், மகளிர், இளமை ததும்பும் புலமை நெஞ்சத்தினர், என் உறவினர், உற்றார், முகநூல் மற்றும் கட்செவி ஆர்வலர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்தியது போதும் என்ற நிறைவைத் தருகிறது.

நிறைந்த நெஞ்சத்தோடு நாட்கள் நகரும் என்றே நம்புகிறேன். வாழ்த்திய மக்களுக்கு என் வணக்கம் என்றும் உரியது.

தமிழறிந்ததால் எனை வாழ்த்தும் தலைவருக்கும் தொண்டருக்கும் தமிழறிஞர்களுக்கும் வழிந்தோடும் என் அன்பை வழங்கி மகிழ்கிறேன் !

நன்றியை சொற்களால் சொல்லி முடியாது!

//// ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *