POST: 2021-10-19T09:46:15+05:30

தொண்ணூற்றைத் தொடும் தூய நெஞ்சம் !

பரிவு உருக்கொண்ட படிமத்தனாய்த்
தலையாய தலைமையாசிரியர் என்ற
தகைசான்ற பெருமகனாய் விளங்கும்

புலவர் திலகம் இராமலிங்கம் அவர்கள்
( 7 – 10 – 2021 )அன்று 90 ஆம் அகவை விழா
பெருமிதமாக கொண்டாடப்பட்டது.

பரந்த மனம் ,படிப்பில் திளைப்பு,
அருமந்த மக்கட் செல்வங்களை அரவணைத்த திறம் ,
சான்றோர் அவை நடத்தும் பெருமிதம்
என்னென்று எழுதுவேன் .

காணும் போதெல்லாம்
அவர் காட்டிய
கரை கடந்த தோழமை
எனக்கு வாய்த்த பேறு .

” ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால் ”
என்று
இராமனைப் போற்றிச் சீதை உருகினார் .

புலவர் மாமணி பல்லாண்டு வாழ்க !

தூய நெஞ்சத்துக்கு எப்போதும் முதுமை இல்லை .

மகிழ்வுடன்.
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *