POST: 2021-10-12T08:48:16+05:30

முரசொலி – 10 – 10 -2021 –
பக்கம் எண் : 7

புலவர் உலகம் போற்றி மகிழ்கிறது !

ஒளவை நடராசன்

எவரும் கேட்க முடியாத இடத்தில்
எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது ஒரு கோப்பு
தவறிவிட்டது என்று சொல்லித் தப்பிக்க முடியாமல்
தவழ்ந்தபடியே பத்தாண்டுகள் தாண்டின !

எழுச்சி முதல்வர் – இளையகலைஞர்
எதனையும் துருவிக் கேட்கும் துடிப்பும் விழிப்பும் கொண்டவர் !
எங்கே கோப்பு என்று வினவினார் ?
இரு நொடிக்குள் மலர்ச்சி தோன்றியது , மாற்றம் பிறந்தது
செம்மொழிக்கலைஞர் விருது செழித்தது !

மறுகணம் அமைந்தது வேந்தர் தலைமையில் தெரிவுக்குழு
வித்தகர் குழு தேர்ந்து பதித்த பத்து முத்துக்கள் விலையிலா மணியாரம்
எத்திக்கும் புகழும் ஈடிலா அறிஞர்கள்
என்றும் ஆய்வில் அமிழ்ந்த அரிய மாமணிகள் !

பட்டியல் கண்டு பாரெல்லாம் போற்றியது
பரிசும் – விருதும் தக்கவர் தோளில் சாய்ந்தன
மகிழ்ச்சி வெள்ளம் எங்கும் பாய்ந்தது !
இதுதான் ஆட்சி ! இனிமைத்தமிழின் மாட்சி !

புலவர் உலகம் போற்றித் துதிக்கிறது
பொன்றாத் தமிழின் புகழொளி மிதக்கிறது !

வாழ்க முதல்வர் ! வளர்க செம்மொழி !!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *