பாடும் தமிழுக்குப் பல்லாண்டு !
பழகும் இனிமையால் பல்லாயிரம் பேர்
தங்கள் தொண்டர்களாயினர் .
இரும்பால் செய்தது போல் மேனி –
இளைத்ததுமில்லை – பருத்ததுமில்லை
பல்லாண்டு வாழ்க !
பரிசுகளின்
வரிசை காத்திருக்கிறது !
நீங்கள் அன்போடழைத்த
ஜெர்ரி தான் அருள் !
அருளோடு தான் இருக்கிறேன்
பழைய நினைவுகள் –
ஈரோட்டில் இருந்த நாள்கள்
விழிகளை ஈரமாக்குகின்றன
நாளும் நலிவு தான்
முரசொலியில் உங்கள் கவிதையைக்
கண்டு வருகிறேன் .
வாழ்க ! வாழ்க !!
அன்போடு
ஒளவை நடராசன்

Add a Comment