POST: 2021-09-10T11:08:34+05:30

அருளாளர் ஆர்.எம்.வி நூறாண்டு வாழ்க !

கடமை ,கணக்கு ,தெளிவு ,நேர்மை என்று வாழ்வைத் தொடங்கி அரசியலில் கனிந்து முதிர்ந்து , பலருக்குத் தோள் கொடுத்து உயர்த்திய பெருமிதத்தோடு அருளாளர் ஆர்.எம்.வி நம்மிடையே வாழ்ந்து வருகிறார் .

அயராது உழைத்த அவருடைய நாள்கள் வரலாற்றில் இடம்பெறும் வான் புகழ்கொண்டவை .

எவர் மனத்தையும் நோவாமல் தன் போக்கில் புரட்சித் தலைவரையே திருத்திய பெருமை வேறெவருக்கும் இல்லை .

அருளாளரால் அறம் தழைத்தது .

இளைஞர்களிடம் ஆற்றல் செழித்தது .

அருளாளர் ஏற்றிய திருவிளக்கின் ஒப்பற்ற ஒளிச்சுடர்கள் தமிழகத்தில் எங்கும் ஒளி வீசுகிறது .

அவரால் வளர்ந்த நடிகர்கள் பலர் .

அவரால் முதன்மை பெற்ற கல்வியாளர்கள் பலர் .
இப்படி எண்ணிக் கொண்டே போகலாம் .

அருளாளர் ஆர்.எம்.வி நூற்றாண்டு கண்டு வாழ்க !
அருளாளர் புகழ் வெல்க !! 95ஆம் பிறந்த நாள் (9.9.2021) மங்கலம் பொலிக!

பணிவுடன்
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *