புலமைப்பித்தன் எங்கே சென்றாரோ !
அஞ்சா நெஞ்சம் – அரிமாத் தோற்றமும் கொண்டு நெஞ்சார்ந்த கவிதைகளை நெருப்புப் பொறிகளாக உதிர்த்த நிறைபுலவர் புலமைப்பித்தனின்
( 6.10.1935 – 8 9 2021 ) மறைவு ஆறாத்துயரம் தருகிறது .
இன்னும் பத்தாண்டுகள் வாழ்ந்திருக்கலாம் .
துணிவினால் அவ்வப்போது இடறியதை நான் தடுத்துக் கூறினேன் , அவர் அப்போதும் என்னிடம் மறுத்தே பேசினார் .
நோயற்ற உடலோடு இருந்தார் .
அவரை நொறுக்கிய துன்பங்கள் பல .
தாங்கி நின்ற தறுகண்மை கண்மூடி விட்டது .
ஆயிரம் நிலவே வா –
அவர் எங்கே உள்ளார் என்று
நீயாவது எங்களுக்குச் சொல் .
ஆறாத துயரத்தோடு
ஒளவை நடராசன்

Add a Comment