நிலவின் நெற்றியில் திலகமிடுவோம்!
மே முதல் நாளை (உழைப்பாளர் தினம்) முன்னிட்டு, அயராது உழைப்போரின் மேன்மைக்கு அணி செய்யும் விதமாக.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்த் தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்புத் திருமுகங்கள் கணினியில் முன்னமர்ந்தபடி மொழியாக்கப் பணிகளைச் செவ்வனே செய்து தருவது தான் வாடிக்கை.
2021 சட்ட மன்றத் தேர்தலில் 6,28,69,955 வாக்காளர்கள், 3998 வேட்பாளர்கள், 234 தொகுதிகள் ,75 வாக்குப்பதிவு மையங்கள், கொண்ட மாபெரும் பணிக்கு
எவ்விவிதச் சுணக்கமின்றி சென்னையிலுள்ள பத்து வாக்கு மாடங்களின் தலைமை அலுவலர்களாக மொழிபெயர்ப்புப்பிரிவின் உதவிப் பிரிவு அலுவலர்கள் திருமதியர் விஜயலட்சுமி, அனிதா, சித்திரா, இரமாலட்சுமி, சுபத்திரா, செல்வன் பரத், திருமதியர் முல்லை, அஜிதா, திரு சாலமன் திறம்படப் பணியாற்றினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டு.
வாக்கு வளாகத்தில் நடக்கும் அனைத்துப் பொருண்மைகளுக்கும் சட்டப்படி அதிகாரம் அவர்கள் வயம் தான்.
அதுபோல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் படிநிலை முறையில் இயக்குதல், நடைமுறைப்படுத்தல், படிவங்களின் விதிகளை அறிந்து எவ்வித இடையூறுமின்றி மக்கள் கடமையை நிறைவேற்றிய வாக்குச்சாவடித் தலைமை அலுவலர் குழுவினரைப் பாராட்டலாம்.
06.04.2021-ஆம் நாளன்று தீநுண்மி நோயர்கள், மூத்தோர், மகளிர், இளைஞர் என அனைவரையும் சமூக இடைவெளியோடு விழிப்பாகக் காலை ஐந்து மணி தொடங்கி இரவு பன்னிரண்டு மணி வரை ஓயாது பணியாற்றிச் செவ்வனே செய்து தர ஆணையிட்ட தேர்தல் ஆணையத்தினருக்கும், தமிழக அரசிற்கும் கடப்பாடு கொண்டுள்ளோம்.
‘பிடிக்குள் அடங்கியதாக ஆற்றல்களைச் சுருக்கி வைத்துள்ளோம்.
புள்ளிதான் வைத்தீர்.
பூக்கோலமும் தீட்டிடுவோம்’,
என எப்பணியையும் செய்யும் படைவீரராய் மொழிபெயர்ப்பாளர்கள் அணியமாக உள்ளனர்.

Add a Comment