POST: 2021-04-16T09:48:34+05:30

அன்பு மழை !

1989 – 1990 – ஆண்டில் கிளியா விளம்பர நிறுவனத்தின் சார்பாக நாள்தோறும் நுங்கம்பாக்கத்திலுள்ள ஆடோசு சாலையிலுள்ள எஸ்ஆர் குழும அலுவலகத்திற்குச் செல்வதுண்டு.

சென்னைக்கிளையைத் தலைமை தாங்கிய அண்ணல் சாரதி பலரை எனக்கு அறிமுகம் செய்வார்.

அவ்வேளையில் அறிமுகமான நல்லன்பர் தான், ‘மக்கள் குரல்’ மாலி ஆவார்கள்.

வெள்ளை வேட்டி, சட்டையுடன் பருமனாக என்னிடம், உரிமையாக கிளியா நிறுவன இயக்குநர்கள் பெயர்களை விளித்துக்கொண்டே, நாள் தவறாமல் மக்கள் குரலுக்கு விளம்பரங்கள் வருவதை உறுதி செய்யும் கடமை வீரராக காட்சியளித்தவர் தான் நம் நினைவில் வாழும் மாலி ஆவார்.

பெருந்தகை மாலியின் அன்பு இளவல் இராம்ஜி நீண்ட கட்டுரைகளை, நுண்ணிய தகவல்களோடு மக்கள் குரலில் எழுதும் திறமை கொண்டவர் .

அண்ணனைப் போலல்லாமல் மெல்லியவராய், இளைத்த மேனியராய் , வெள்ளைச் சட்டையும் பேண்டும் அணிந்து கொண்டு கருநிறக் கண்ணனாக மிளிரும் இராம்ஜி, அண்மையில் என்னைப் பற்றி மக்கள் குரல் இதழில்(11.4.2021-பக்கம் 7) நினைவு கூர்ந்து வரைந்த வரிகளைச் சுட்டிக்காட்டுகிறேன் .

அண்ணல் இராம்ஜியின் அன்பு என்னை நெகிழ்வித்தது .

” உயிர் வளி உருளை ஆலை ” தெரியுமா ?

மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருளிடமிருந்து வந்த ஒரு செய்திக்குறிப்பில் இடம் பெற்றிருந்த வார்த்தை .

” உயிர் வளி உருளைத் தொழிற்சாலை ”

அது எனை என்ன உயிர் வளி உருளை ,சட்டென்று கிரகித்துக் கொள்ள என்னால் முடியாமல் , 120 வினாடிகள் யோசித்து யோசித்து சிரமப்பட்ட நிலையில் கைபேசியை எடுத்தேன் .

அருளை அழைத்தேன் .அந்த 3 வார்த்தைகளுக்கும் ஆங்கிலத்தில் என்ன …? என்று கேட்டேன் .சொன்னார் .

” உயிர் வளி உருளைத் தொழிற்சாலை ”

அது ஆக்சிஜன் சிலிண்டர் பேக்டரி ( OXYGEN CYLINDER FACTORY ) என்றார் .

தமிழ் வளர்ச்சிக்குப் புதுப்புது வார்த்தைகள் அறிமுகம் ,

அருமை , அருமை ! “

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *