POST: 2021-03-18T10:12:07+05:30

வானார்ந்த பெரும்புகழ் வெல்க!

கூ. வ. எழிலரசு, எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,

உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள், தமிழுக்குத் தொண்டு செய்து தம்புகழ் நிறுவித் தாம் மாய்ந்த பெருந்தகை ஆவார்.

தமிழரின் இனமான வரலாறு சிலரால் மறைக்கப்பட்ட போதும், திரித்துரைக்கப்பட்ட போதும் வீறு கொண்டெழுந்து, ஆழப்பதிந்து கிடந்த தமிழின் வேர்களையும், விழுதுகளையும் தமிழர்கள் உணரக்காட்டிய பெருமை உரைவேந்தருக்கு மட்டுமே உரியது.

உரைவேந்தர் ஒளவை வரைந்த உரைகளெல்லாம் தமிழின் மீது படிந்த கறைகளைக் களைந்தன என்பது பொருத்தமே !

தமிழ் கூறு நல்லுலகில் உரைவேந்தரின் தமிழ்த் தொண்டு, காலத்தாற் பதிக்கப்பெற்ற வயிரமணியாய் ஒளிவீசுகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *