POST: 2021-02-09T07:52:45+05:30

கருத்தைக் கவர்ந்த கழகப்பழம் !

பகை முடிப்பதில் செங்குட்டுவன் சினம் ! .
பதவி தேடாததில் இளங்கோவின் மனம் .
பழகுவார்க்குப் பரிவு காட்டிய கழகப்பழம் ,

எனக்கு அவருடைய நட்பு
ஐம்பது ஆண்டுகட்கு மேலானது .
இன்றைய நிலையில் நூறு வயதைத் தொட்டு
நுகர்வார் என்ற நிலையில்

முகம் வனப்பு குலையாமல்
காட்சியின்பம் வழங்கி வந்தது .
காலப்புயலில் அந்தக்கனி
உதிர்ந்து விழுந்தது .

புதுமை பூக்கும் எனக் காத்திருந்த
அருமை நண்பரை
முதுமையும் – நலிவும் சாய்த்துவிட்டன ..

துயரத்தோடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *